மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரை எய்ம்ஸ்.. தமிழக மக்களுக்கு பெரிய அளவில் பயன்படும்.. மோடி பெருமிதம்!

மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையால் தமிழக மக்கள் பெரிய அளவில் பலன் பெறுவார்கள் என்று மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய மோடி

    மதுரை: மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையால் தமிழக மக்கள் பெரிய அளவில் பலன் பெறுவார்கள் என்று மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

    மதுரையில் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மதுரை தோப்பூரில் ரூ.1264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கிறது.

    இதற்காக இன்று காலை பிரதமர் மோடி மதுரை வந்தார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பின் பிரதமர் மோடி மருத்துவமனை குறித்து பேசினார். மொத்தம் 10 நிமிடங்கள் பிரதமர் மோடி பேசினார்.

    தமிழில் தொடக்கம்

    தமிழில் தொடக்கம்

    வந்துள்ள எல்லோருக்கும் என்னுடைய வணக்கம் என்று பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அதில், மீனாட்சி சுந்தரேஷ்வர் கோயிலுக்கு புகழ் பெற்ற மதுரைக்கு வந்துள்ளதற்கு மகிழ்கிறேன். டெல்லியில் அத்துறையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆரோக்கியத்துறையில் புகழ் பெற்றது.மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை புகழ் பெறட்டும்.

    எய்ம்ஸ் உதவிகரமாக இருக்கும்

    எய்ம்ஸ் உதவிகரமாக இருக்கும்

    மதுரையில் எய்ம்ஸ் 1200 கோடிக்கும் மேற்பட்ட தொகையில் கட்டப்படும். நாட்டின் நான்கு திசைகளிலும் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. மொத்த தமிழக மக்களுக்கும் எய்ம்ஸ் உதவிகரமாக இருக்கும். தே.ஜ.கூட்டணி ஆரோக்கியத்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறது.

    மருத்துவ காப்பீடு பயன்

    மருத்துவ காப்பீடு பயன்

    பிரதமரின் மருத்துவ காப்பீட்டிற்கு திட்டத்திற்கு பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. தமிழக மக்களுக்கு இதனால் பெரிய பலன் கிடைத்து இருக்கிறது. ஒன்றரை கோடி தமிழக மக்கள் பிரதமரின் காப்பீடு திட்டத்தில் பலன் அடைந்துள்ளனர்.அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பணியாற்றி வருகிறது.

    நிறைவு செய்தார்

    நிறைவு செய்தார்

    முக்கியமாக தமிழகத்தில் இருக்கும் மக்களுக்கு எளிதாக மருத்துவ வசதி கிடைக்க அரசு பெரிய முயற்சி எடுத்து வருகிறது. மருத்துவ வசதி மட்டுமில்லாமல் மத்திய அரசின் மற்ற திட்டங்களையும் தமிழக மக்கள் எளிதாக பெற திட்டங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது, எங்களது அரசு ஆரோக்கியத்துறையில் உலகிற்கே முன்னோடியாக இருக்கும். என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். கடைசியாக நன்றி, வணக்கம் என தமிழில் தெரிவித்து உரையை நிறைவு செய்தார் பிரதமர் மோடி

    English summary
    Madurai AIIMS will be very useful for Tamilnadu people says PM Modi in AIIMS inaugural function.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X