மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சரக்கு அடிக்க காசு கேட்டு நச்சரித்த அஜித்.. ஆத்திரத்தில் மகன் என்றும் பாராமல் சரோஜா செஞ்ச கொடூரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    சரக்கு அடிக்க காசு கேட்டு நச்சரித்த அஜித்.. ஆத்திரத்தில் மகன் என்றும் பாராமல் சரோஜா செஞ்ச கொடூரம்-வீடியோ

    மதுரை: குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் ஆத்திரம் அடைந்த மதுரையைச் சேர்ந்த தாய் , பெற்ற மகனை உயிருடன் கொளுத்தினார். இதில் அவரது மகன் அஜித் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மதுரை, ஒத்தக்கடை அருகேயுள்ள காளியப்பன் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி.இவரது மனைவி சரோஜா இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் அஜித்குமார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    madurai ajith kumar killed by mother saroja over alcohol issue

    அஜீத் குமார் ஊதாரித்தனமாக செலவு செய்து வருவதும் மேலும் எப்பொழுதும் கஞ்சா, மது என போதையில் வந்து தகராறு செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். நண்பர்களோடு சேர்ந்து ஊதாரித்தனமாக சுற்றிய அஜீத் குமார் கூலி வேலை பார்த்து வரும் தனது தாயார் சரோஜாவிடம் மது குடிப்பதற்காக அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். நண்பர்கள் உறவினர்கள் மற்றும் வீட்டை சுற்றியுள்ள அனைவரிடமும் கடன் வாங்கி செலவு செய்து வந்த அஜித்தை தாயார் சரோஜா கண்டித்துள்ளார்.

    இதனால் கோபமடைந்த அஜித்குமார் கடந்த இரண்டு தினத்துக்கு முன் தாய் சரோஜாவிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற தாய் சரோஜா வீட்டில் வாங்கி வைத்திருந்த மண்ணெண்னையை அஜித்குமார் மீது ஊற்றி தீவைத்துள்ளார். தீ மளமளவென அஜித்குமார் உடல் முழுவதும் பரவியது. இதனால் அலறிய அஜித்குமாரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    சிகிச்சை பெற்று வந்த அஜித்குமார் திடீரென நேற்று இரவு பலியானார். உடனடியாக ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சரோஜாவை கைது செய்தனர்.பெற்ற மகனையே எரித்து கொன்ற தாயால் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    madurai ajith kumar Burned and died by angry mother soroja after son asked money for bought alcohol
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X