மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதுரை சித்திரை திருவிழா.. இரவிலும் சிறப்பு பேருந்துகள்.. அனைத்து ஏற்பாடுகளும் தயார்- ஆட்சியர்

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரை சித்திரை திருவிழா..அனைத்து ஏற்பாடுகளும் தயார்- ஆட்சியர்-வீடியோ

    மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் 20 மருத்துவக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இரவிலும் அனைத்து பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பேட்டி அளித்துள்ளார்.

    மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் 20 மருத்துவக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

    Madurai Collector says that for Madurai Chithirai festival buses can ply in night time too

    மேலும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக வைகை அணையில் இருந்து, இன்று திறக்கப்படும் 216 மில்லியன் கியூபிக் தண்ணீர் 6 மணி நேரத்திற்கு முன்பாகவே கள்ளழகர் இறங்கும் இடத்திற்கு வந்து சேரும்.

    திருவிழாவில் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் விழாவினை கண்டுகளிக்கும் வகையில் 20 இடங்களில் எல் இ டி திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 33 இடங்களில் 66 மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட உள்ளனர்.

    தேர்தல் பணியும், திருவிழா பணியும், சிறப்பாக நடைபெற மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்காக வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால், மதுரை வைகை ஆற்றில் கட்டப்படும் தடுப்பணைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

    Madurai Collector says that for Madurai Chithirai festival buses can ply in night time too

    வேகமா வந்தாங்க.. பேசும் போதே சுட்டாங்க.. ஆண்டிபட்டி துப்பாக்கி சூடு குறித்து அமமுகவினர் விளக்கம்வேகமா வந்தாங்க.. பேசும் போதே சுட்டாங்க.. ஆண்டிபட்டி துப்பாக்கி சூடு குறித்து அமமுகவினர் விளக்கம்

    திருத்தேர் சுற்றிவரும் பகுதிகளில் 9 இடங்கள் மின்சாரம் தடை ஏற்படுத்தும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு வாக்குப்பதிவு தடைப்படாத வண்ணம் மாநகராட்சி மற்றும் மின்சார வாரியம் உதவியுடன் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் தேர் சுற்றி வரும் பகுதிகளில் சாலை வசதி மேம்படுத்தப்பட்டு, வாக்குப் பதிவிற்காக பேரி காட் அமைக்கப்பட்டுள்ளது. தேர் சுற்றிவரும் போது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், கிரேன் உதவியுடன் திருத்தேர் சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    18ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்காகவும், 19ஆம் தேதி வைகை ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழாவிற்காகவும், பேருந்து இயங்க போக்குவரத்து துறையுடன் பேசி, இரவிலும் அனைத்து பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சியர் நடராஜன் அப்போது தெரிவித்தார்.

    English summary
    Madurai Collector Natarajan says that on the account of election and Madurai Chithirai festival buses can be plied in night time too.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X