மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாக்கு பதிவு நேரத்தை நீடிக்கலாம்.. சித்திரை திருவிழாவோடு லோக்சபா தேர்தலை நடத்தலாம்.. மதுரை ஆட்சியர்

Google Oneindia Tamil News

Recommended Video

    சித்திரை திருவிழாவோடு லோக்சபா தேர்தலை நடத்தலாம் - மதுரை ஆட்சியர்-வீடியோ

    மதுரை: வாக்குப் பதிவு நேரத்தை நீடிக்கலாம். சித்திரை திருவிழாவோடு லோக்சபா தேர்தலை நடத்தலாம் என மதுரை ஆட்சியர் நடராஜன் தெரிவித்தார்.

    தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அந்த தேதிக்கு முன்பும் , பின்பும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.

    ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் இந்த திருவிழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர். இந்நிலையில் தேர்தல் வைத்தால் அது வாக்குப் பதிவை பாதிக்கும் என்பதால் தேர்தல் தேதியை மாற்றி வைக்குமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     ஆஹா.. ஈரோடு போயி திண்டுக்கல் வர வச்சுட்டாங்களே.. தொகுதிக்காக அலை பாயும் ஈவிகேஎஸ்! ஆஹா.. ஈரோடு போயி திண்டுக்கல் வர வச்சுட்டாங்களே.. தொகுதிக்காக அலை பாயும் ஈவிகேஎஸ்!

    சித்திரை திருவிழா

    சித்திரை திருவிழா

    இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழா குறித்து இன்றைக்குள் விளக்கம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் நடராஜனுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    ஏற்பாடுகள்

    ஏற்பாடுகள்

    இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சித்திரை திருவிழாவோடு மதுரையில் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவது சாத்தியம் உள்ளது. மதுரையில் ஏப்-18 ஆம் தேதி சித்திரை திருவிழா தேரோட்டம்,கள்ளழகர் எதிர் சேவை திருவிழா நடைபெறவிருப்பதால் அன்றைய தினம் வாக்குபதிவு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

    விளக்கம்

    விளக்கம்

    மேலும் ஆணையம் அறிவித்தபடி தேர்தலை நடத்துவதற்கு ஆயத்தமாக உள்ளோம். திருவிழாவால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து கட்சியினர் தெரிவித்த கோரிக்கைகளை விளக்கியுள்ளோம்.

    பணியாளர்கள்

    பணியாளர்கள்

    தேர்தல் ஆணையம் சித்திரை திருவிழாவிற்கான உள்ளூர் விடுமுறை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பதில் அளித்துள்ளோம். தேர்தலின் போது கூடுதலாக காவலர்கள் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்களை கேட்டுள்ளோம்.

    வாக்குப் பதிவு நேரத்தை நீட்டிக்க முடிவு

    வாக்குப் பதிவு நேரத்தை நீட்டிக்க முடிவு

    தேவைப்படும் பட்சத்தில் வாக்குபதிவு நேரத்தை நீட்டிக்கலாம் என்பது குறித்து விளக்கம் கொண்டுள்ளோம், தேர்தல் ஆணையம் அளிக்கும் ஆலோசனைகளை பொறுத்து தொடர்ந்து தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

    English summary
    Madurai Collector Natarajan says that he is ready to extend time for polling in Loksabha elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X