மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிர்மலா தேவி வழக்கை சிபிஐக்கு அனுப்ப முடியாது.. மதுரை ஹைகோர்ட் கிளை மறுப்பு

Google Oneindia Tamil News

மதுரை: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக உதவி பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கினை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவியை, அதே கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் 2018 ஏப்ரலில் காவல்துறையினர் கைது செய்தனர்.

Madurai HC bench refuses to order CBI probe into Nirmala Devi case

இந்த வழக்கில் மதுரை காமராஜர் கல்லூரி உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பலருக்கு தொடர்புள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. யாருக்காக அவ்வாறு செய்தார் என விசாரிக்கவில்லை. சிபிசிஐடி காவல்துறையினர் நியாயமாக விசாரிக்காமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடி வசமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும்" என கூறியிருந்தார்.

Madurai HC bench refuses to order CBI probe into Nirmala Devi case

இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஏற்கனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டதோடு பிப்ரவரி 27ல் வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,

" மாணவிகளிடம் 164 பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட் முன்பாக வாக்குமூலம் பெறவில்லை. மேலும் பேராசிரியை நிர்மலா தேவி யாருக்காக மாணவிகளிடம் அவ்வாறு பேசினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை. உயரதிகாரிகள் எனும் ஒற்றை வார்த்தையில் சுருக்கிவிடும் காவல்துறை அவர்கள் யார் என விசாரிக்கவில்லை.

பல்கலைக்கழக பதிவாளர், வேந்தர், துணைவேந்தர், உயர்கல்வித்துறை செயலர், உயர்கல்வித்துறை அமைச்சர் என அனைவரும் உயரதிகாரிகள் என்ற பட்டியலுக்குள் வரும் நிலையில், அந்த உயரதிகாரி யார் என கூறவோ, அவர்களிடம் விசாரிக்கவோ இல்லை. இந்நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்றால் சரியான தீர்வு கிடைக்காது. ஆகவே, வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என வாதிட்டார்.

Madurai HC bench refuses to order CBI probe into Nirmala Devi case

அதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், " வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. வழக்கு விசாரணை முறையாகவே நடைபெற்று வருகிறது. ஆகையால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை" என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்தனர். அப்போது, சிபிசிஐடி விசாரித்து குற்றப்பத்திரிக்கை மற்றும் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை. மேலும், சாட்சிகளின் அடிப்படையில் கூடுதலாக குற்றவாளிகளைச் சேர்ப்பதற்கு விசாரணை நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் கீழ் நீதிமன்ற விசாரணைக்கு விதித்த தடையையும் நீக்கி உத்தரவிட்டனர்.

இதன் மூலம் நிர்மலா தேவி வழக்கு மீண்டும் சூடு பிடிக்கப் போகிறது. தற்போது நிர்மலா தேவி மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளது போல நடந்து கொண்டு வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
Madurai HC bench has refused to order CBI probe into Nirmala Devi case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X