மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2013-இல் ஆசிட் வீச்சு.. 6 ஆண்டுகளாக மதுரையில் சிகிச்சை.. மனம் தளராத நேபாள பெண் பிந்துபாஷினி

Google Oneindia Tamil News

மதுரை: ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட நேபாளி பெண்ணின் முகத்தை மதுரை மருத்துவமனை சீரமைத்து அவருக்கு புது வாழ்வையும் நம்பிக்கையும் தெரிவித்தது.

நேபாளத்தை சேர்ந்தவர் பிந்துபாஷினி கான்சாகர். கடந்த 2013-ஆம் ஆண்டு இவர் பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை பக்கத்து வீட்டில் வசித்து வந்த திலிப் ராஜகேசரி என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்தார்.

இந்த நிலையில் பிந்துவிடம் கேசரி தனது காதலை பல முறை சொன்ன நிலையில் அவர் மறுத்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த கேசரி, பிந்துவின் முகத்தில் ஆசிட் வீசினார்.

பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா.. உடனே பேசி வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்.. மாஸ் ரீச்.. இதுதான் பின்னணி! பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா.. உடனே பேசி வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்.. மாஸ் ரீச்.. இதுதான் பின்னணி!

90 சதவீதம்

90 சதவீதம்

இதில் அந்த பெண்ணின் முகம் 90 சதவீதம் சேதமடைந்தது. அவரது கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிய பிந்து பின்னர் பள்ளிப்படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்தார்.

6 ஆண்டுகள் சிகிச்சை

6 ஆண்டுகள் சிகிச்சை

எங்கு சென்றாலும் முகத்தை பேன்டேஜால் சுற்றியும் கண்களுக்கு கூலிங் கிளாஸ் அணிந்தபடியே சென்றார். இதையடுத்து தனது முகத்தை சீரமைக்க மதுரையில் உள்ள தேவதாஜ் தனியார் மருத்துவமனையில் கடந்த 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.

காதலை ஏற்க மறுப்பு

காதலை ஏற்க மறுப்பு

தற்போது அந்த பெண் முழுமையாக புது நம்பிக்கை உற்சாகத்துடன் மீண்டும் வந்துள்ளார். இதற்கு அங்கிருந்த மருத்துவர் ஹேமா சதீஷ் என பிந்து கூறியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் கூறுகையில் என் மீது ஒருதலைக் காதல் கொண்ட சேகரியின் காதலை ஏற்க மறுத்து 14 நாட்கள் கழித்து எனது கடைக்கு வந்தார்.

3 அறுவை சிகிச்சைகள்

3 அறுவை சிகிச்சைகள்

அப்போது என் முகத்தில் ஆசிட் வீசிவிட்டு தப்பினார். இதையடுத்து எனது தந்தை என் முகத்தில் தண்ணீரை ஊற்றினார். பின்னர் என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பின்னர் காட்மாண்டுவில் உள்ள மருத்துவமனையில் எனக்கு 3 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

முகத்தை மறைத்து

முகத்தை மறைத்து

இதையடுத்து எனக்கு காஸ்மெட்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து எனது பெற்றோர் என்னை இந்தியாவுக்கு அழைத்து வந்தனர். மதுரையில் தேவதாஸ் மருத்துவமனையில் எனக்கு 100 சதவீதம் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நான் சன் கிளாஸ் இல்லாமலும் முகத்தை மறைக்காமலும் வெளியே செல்ல இயலும் என்றார்.

காயம்

காயம்

இதுகுறித்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில் கண்களுக்கு கீழேயும் மேலேயும் உள்ள தோல் மிகவும் பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் பிந்து சிறிது சிறிதாக கண்களை திறந்தார். காதுக்கு பின்புறத்தில் இருந்து சதையை எடுத்து மூக்கையும் சீரமைத்தோம். பின்னர் கழுத்து, கண்கள், கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த காயம் வடுக்கள் நீக்கப்பட்டன.

இயல்பு நிலை

இயல்பு நிலை

கடந்த 6 ஆண்டுகளாக அவருக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. அதே சமயம் பிந்துவுக்கு நம்பிக்கை ஏற்பட உளவியல் ரீதியிலான அறிவுரைகளும் வழங்கப்பட்டன. ஆசிட் வீச்சிற்கு பிறகு எங்களிடம் வந்த பிந்துவால் கண்களை மூடவே முடியவில்லை. இதற்காக அறுவை சிகிச்சை செய்தோம். லேசர் கொண்டு அவரது கண்களை மூடினோம். அவர் 85 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார் என்றனர். தன்னை போல் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிந்து தன்னம்பிக்கையையும் மன தைரியத்தையும் வளர்த்து வருகிறார்.

English summary
Madurai hospital reconstructs face of Nepal acid attack survivor Bindabasini Kansakar gives her hopes. Her face damaged upto 90 percent while acid attacking.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X