மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதுரையில் ஜல்லிக்கட்டு... துள்ளி வரப்போகுது காளைகள் - அரசாணை வெளியிட்ட அரசு

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப்போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் துவக்கி வைக

Google Oneindia Tamil News

மதுரை: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகை நாளில் நடைபெற உள்ளது. ஜனவரி 14 முதல் 16 வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப்போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் துவக்கி வைக்க உள்ளதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரம், 15ல் பாலமேடு, 16ல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அரசாணை பிறப்பிப்பித்துள்ளது.

Madurai Jallikattu in Madurai OPS and EPS to launch on Alanganallur

தைத்திருநாளான பொங்கல் பண்டிகையின் போது ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்காக மாடுகளை தயார் செய்யும் பணி தொடங்கிவிட்டது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்த முறை ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி வழங்குமா? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. இந்த நிலையில், கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரம், 15ஆம் தேதி பாலமேடு, 16ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை பிறப்பித்துள்ளது.

"என் கடைசி ஆசை.. அதையும் நிராகரிச்சிட்டாங்க".. விஆர் வாங்க காரணம் இதுதானாம்.. சகாயம் வேதனை..!

இந்தநிலையில் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வரும் 16-ந்தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிடுவார்கள் என்று தெரிவித்தார்.

English summary
Jallikattu competition is to be held in Madurai for Pongal festival. The Government of Tamil Nadu has issued an order for this. Minister RB Udayakumar has said that Chief Minister Edappadi Palanisamy and Deputy Chief Minister O. Panneer Selvam will inaugurate the jallikattu competition to be held in Alankanallur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X