மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமைச்சர் தொகுதிக்கான அறை சாவி எங்கே.. ஏன் இன்னும் கொடுக்கலை.. சிபிஎம் சரமாரி கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    அமைச்சர் தொகுதிக்கான அறை சாவி எங்கே.. சிபிஎம் சரமாரி கேள்வி

    மதுரை: மதுரை வாக்குஎண்ணிக்கை மையத்தில் உள்ள அமைச்சரின் மேற்கு தொகுதிக்கான அறையின் சாவி மட்டும் இன்னும் ஒப்படைக்கப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வெங்கடேசன் குற்றம்சாட்டி உள்ளார்.

    தபால் வாக்குகள் உள்ள அறையிலும் தொடர்ந்து விதிமீறல் நடப்பதாகவும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசிடிவி சூடாவதாக கூறி அடிக்கடி அணைத்து வைக்கப்படுவதாகவும் வெங்கடேசன் குற்றம்சாட்டினார்.

    மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் :

    இலங்கை தாக்குதலுக்கு 50 மணி நேரம் கழித்து பொறுப்பேற்ற ஐஎஸ்.. ஏன் இந்த தாமதம்? மர்மம் என்ன? இலங்கை தாக்குதலுக்கு 50 மணி நேரம் கழித்து பொறுப்பேற்ற ஐஎஸ்.. ஏன் இந்த தாமதம்? மர்மம் என்ன?

    பின்னணி என்ன

    பின்னணி என்ன

    அப்போது அவர்கள் கூறுகையில், "மதுரையில் வாக்குஎண்ணிக்கை மையத்தில் விதிமீறலாக நுழைந்த அதிகாரிகள் பிண்ணனி குறித்து விசாரிக்க வேண்டும் என கோரியுள்ளோம், மாவட்ட ஆட்சியரை மீறி இது நடந்திருக்க வாய்ப்பில்லை, அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

    மேற்கு தொகுதி சாவி

    மேற்கு தொகுதி சாவி

    வாக்கு எண்ணிக்கை மையத்தில் சீல்வைக்கப்பட்ட மத்திய தொகுதியின் அறைக்கான சாவிகள் மட்டும் உடனடியாக ஒப்படைக்கப்பட்டது. ஆனால் மற்ற 5 தொகுதிகளின் சீலிடப்பட்ட அறையின் சாவிகள் சம்பவத்தின் விசாரணைக்கு பின்னரே 4 தொகுதிகளின் அறைக்கான சாவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மேற்கு தொகுதி அறைக்கான சாவிகள் ஒப்படைக்கவில்லை.

     சாவியை கொடுத்தது யார்?

    சாவியை கொடுத்தது யார்?

    மாவட்ட ஆட்சியரை மாற்றினால் மட்டுமே வாக்கு எண்ணிக்கை என்பது நியாயமாக நடக்க வாய்ப்பு உள்ளது. வாக்கு எண்ணிக்கை விதிமீறல் குறித்த எதிர்ப்பு தெரிவித்தபோது மாவட்ட ஆட்சியர், பிரச்சனை நடைபெற்ற இடத்திற்கு வரவில்லை, விதிமீறலில் ஈடுபட்ட பெண் அதிகாரி சம்பூர்ணத்திடம் அறைகளுக்கான சாவி இருக்க வாய்ப்பில்லை. யார் சாவியை கொடுத்து அனுப்பியது.

    கேமரா இல்லை

    கேமரா இல்லை

    விதிமீறிய அதிகாரியை போலீசாரிடம் இருந்து மாவட்ட ஆட்சியர் பெயரை சொல்லி அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது, தபால் வாக்குகள் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி கேமிராக்கள் இல்லை என புகார் கூறியதையடுத்து தற்போது வரை சிசிடிவி பொறுத்தப்பட்டுள்ளதா என தெரியவில்லை, தனது பொறுப்பின் கீழ் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்த விதிமீறலுக்கு மாவட்ட ஆட்சியர் தான் பொறுப்பேற்க வேண்டும்" என்றனர்.

    காவல்துறை உடந்தை

    காவல்துறை உடந்தை

    இதனிடையே மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் பேசுகையில், தபால் வாக்கு எண்ணிக்கை மையத்தை அடிக்கடி சீலை திறந்து வாக்குகளை வைக்கின்றனர். ஆனால் முகவர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள சிசிடிவி கேமிராக்களை சூடாவதாக சொல்லி அடிக்கடி நிறுத்திவைக்கும் நிலை உள்ளது, வாக்குஎண்ணிக்கை மையத்தில் நுழைந்த அதிகாரிகள் அரசு வாகனத்தில் சென்றுள்ளனர். விதிமீறலில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு காவல்துறையும் உடந்தையாக இருந்திருக்கிறது" என்றார்.

    English summary
    Madurai Marxist Communist candidate Venkatesan accuses district collector and police fever of aiamdk
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X