மதுரை மேயர் இந்திராணியின் செண்டிமென்ட்! பூட்டியே கிடக்கும் அரசு பங்களா! பின்னணி என்ன?
மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் தனக்கு கொடுக்கப்பட்ட அரசு பங்களாவில் செண்டிமெண்ட் காரணமாக குடியேற ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மதுரை அண்ணா நகரில் உள்ள மேயர் பங்களாவானது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திராணி மட்டும் தான் இப்படி என்று எண்ணிவிட வேண்டாம், இதற்கு முன் மதுரை மேயர்களாக இருந்தவர்களும் அந்த பங்களாவில் குடியேறாமல் இருந்தது கவனிக்கத்தக்கது.
“கொஞ்ச நாள் கம்முனு இருங்க.. அவர் பார்த்துக்குவாரு” - மேயர் பிரியாவுக்கு பறந்த உத்தரவு!

மதுரை மேயர்
மதுரை மாநகராட்சி மேயராக இருப்பவர் இந்திராணி. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் சிபாரிசு மூலம் மேயர் பதவியில் அமர்ந்த இவர், தனது ஒவ்வொரு
நடவடிக்கையையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுவிடுவார்.
குடும்பத்தலைவியாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் இந்திராணி என்பதால், இப்போது தான் அரசியல் அரிச்சுவடியை கற்று வருகிறார்.

என்ன செண்டிமென்ட்
இதனிடையே மேயருக்கு கொடுக்கப்பட்டுள்ள அரசு பங்களாவில் குடியேற அவர் ஆர்வம் காட்டவில்லை என்பது நமக்கு கிடைத்துள்ள புது தகவலாகும். இதற்கு காரணம்
செண்டிமெண்ட் தான் எனக் கூறப்படுகிறது. இந்திராணிக்கு மட்டும் தான் இப்படியொரு செண்டிமெண்டா என ஆராய்ந்தால், ஏறத்தாழ கடந்த 20 ஆண்டுகளாகவே இந்த செண்டிமெண்ட் மதுரை மேயர்களாக இருந்தவர்கள் மத்தியில் இருந்து வருவதை அறிய முடிகிறது.

அரசு பங்களா
2001-ம் ஆண்டுக்கு பிறகு மதுரை மேயராக இருந்த யாரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அரசு பங்களாவில் குடியேறவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. திமுகவை சேர்ந்த குழந்தைவேலு மேயராக இருந்தபோது தனது
குடும்பத்தினருடன் அந்த பங்களாவில் வசித்தார்.
இவருக்கு அடுத்தப்படியாக மதுரை மேயரான ராமச்சந்திரன், தேன்மொழி கோபிநாதன், ராஜன் செல்லப்பா என யாரும் அந்த வீட்டுக்கு குடிபோகவில்லை.

செண்டிமென்ட் காரணம்
ராஜன் செல்லப்பா கட்சியினரை சந்திக்கவும், முக்கிய ஆலோசனைகள் நடத்தவும் மட்டும் அந்த இல்லத்தை பயன்படுத்தினார். மதுரை அண்ணா நகரில் அந்த இல்லம்
இன்னமும் மாநகராட்சி செலவில் முறையாக பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மதுரையின் தற்போதைய மேயரான இந்திராணியாவது இந்த செண்டிமெண்டை உடைத்தெறிந்து மேயர் பங்களாவில் குடியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் நடக்கவில்லை.