மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்ச்சை பேச்சு.. மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்.. பரபரப்பு

Google Oneindia Tamil News

மதுரை: ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை கூட்டுறவுத்து துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இழிவுபடுத்தியதாக கூறி , அவரது வீட்டை, யாதவர் அமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் யாதவ சமுதயா நிர்வாகிகளை கைது செய்தனர்.

மதுரையில் அண்மையில் நடந்த விழா ஒன்றில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும் போது ஒரு சமூகத்தினர் குறித்து பேசிய வார்த்தை சர்ச்சையானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு யாதவர் இளைஞர் அமைப்பு, யாதவர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ்நாடு யாதவ மகாசபை உள்ளிட்ட அமைப்பினர் 38 பேர் நேற்று மாலை அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட்டனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த செல்லூர் போலீசார் அவர்களை கைது செய்தனர். அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட வந்த 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகினர்.

முதலமைச்சரின் திடீர் பிரச்சாரம்... சற்றும் எதிர்பார்க்காத ஓ.பி.எஸ்... முணுமுணுக்கும் நிர்வாகிகள்..! முதலமைச்சரின் திடீர் பிரச்சாரம்... சற்றும் எதிர்பார்க்காத ஓ.பி.எஸ்... முணுமுணுக்கும் நிர்வாகிகள்..!

போராட்டம்

போராட்டம்

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிரான போராட்டம் குறித்து வழக்றிஞர் ரகுநாத் பேசும் போது, ‘‘மதுரை செல்லூரில் வீரன் அழகு முத்துகோன் சிலை அமைத்திட இடம் தேர்வு செய்து மாநகராட்சி அனுமதிக்கு கேட்டிருந்தோம். சிலை வைத்தால் போக்குவரத்து நெரிசல் என்றார்கள். ஆனால், இதே இடத்தில் கபடி வீரர்கள் சிலை வைக்க அமைச்சர் முனைப்புடன் செயல்பட்டார். அத்துடன் இப்போது அவதூறாக பேசி மன்னிப்பு கேட்கிறார்.. இந்த செயல்கள் கண்டிக்கத்தக்கது'' என்றார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அகில இந்திய யாதவ பாதுகாப்பு பேரவை நிறுவன தலைவர் கேப்டன் ராஜன் கூறுகையில், தமிழகத்தில் 1 கோடியே 20 லட்சம் யாதவர்கள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை அந்தந்த தொகுதிகளிலுள்ள யாதவர்களின் வாக்கு வங்கி தான் தீர்மானிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, யாதவ சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார். அவரின் இந்த செயல் கண்டனத்திற்குரியது. அவர் மீது தமிழக முதல்வர், துணை முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இல்லையெனில் அகில இந்திய யாதவ பாதுகாப்பு பேரவை மற்றும் யாதவ கூட்டமைப்பு சார்பில் 21ம் தேதி (நாளை) மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம். மறியல் போராட்டம் நடத்துவோம், தேர்தலில் தகுந்த பாடம் புகட்டிடுவோம், என்றார்.

தெர்மாகோல்

தெர்மாகோல்

இதனிடையே தமிழகத்தில் பல இடங்களில் அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து யாதவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். திருச்செந்தூரில் யாதவர் இளைஞரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், யாதவர் பெருமக்களை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தெர்மாகோலை கொண்டு வந்து கிழித்தெறிய முடிவு செய்தனர். ஆனால் காவல் துறை அனுமதி மறுத்தனர்.

திரண்ட யாதவர்கள்

திரண்ட யாதவர்கள்

சங்கரன்கோவில் தேரடி திடலில் நேற்று யாதவர் சமுதாயத்தினர் திரண்டு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சிலர், அமைச்சர் செல்லூர் ராஜூவின் படத்தை திடீரென எரித்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் அவர்களை பிடித்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

English summary
Co-operatives Minister Cellur Raju's house was besieged and protested by Yadav activists, claiming that he had insulted a particular community. Police subsequently arrested Yadav community executives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X