• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்

|

மதுரை: ராத்திரி, பகல் பாராமல் எப்ப பார்த்தாலும் உறவுக்கு வற்புறுத்தி டார்ச்சர் செய்த கணவனை, மனைவியே கொன்ற சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் மதுரையில் அடங்கவில்லை.. அவரது இந்த கொலை தொடர்பான பல தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.. உயிரிழந்தவரின் ஆணுறுப்பை நசுக்கியது அவரது மச்சான்தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மதுரை அருகே உள்ள நகரம் திருமங்கலம். அந்த ஊரைச் சேர்ந்தவர் சுதீர் என்கிற சுந்தர். இவருக்கு 34 வயசாகிறது. இவருக்கும், அருள் செல்வி என்பவருக்கும் 8 வருடங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இந்தத் தம்பதிக்கு அழகான பெண் குழந்தையும் உள்ளது. அருள் செல்வி ஒரு டீச்சர் ஆவார்.

இந்த நிலையில்தான் திடீரென கணவர் சுதீர் படுக்கையிலிருந்து கீழே விழுந்து விட்டதாக கூறி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் மனைவி.

ஆணுறுப்பை நசுக்கி.. அரை நிர்வாணமாக ரோட்டில் வீசப்பட்ட மாப்பிள்ளையின் பிணம்.. பதற வைக்கும் தருமபுரி ஆணுறுப்பை நசுக்கி.. அரை நிர்வாணமாக ரோட்டில் வீசப்பட்ட மாப்பிள்ளையின் பிணம்.. பதற வைக்கும் தருமபுரி

 போலீஸ் ஜீப்

போலீஸ் ஜீப்

டாக்டர்களிடம் தனது கணவர் கட்டிலிலிருந்து கீழே விழுந்து விட்டதாக கூறியுள்ளார் மனைவி. டாக்டர்களும் பரிசோதித்து விட்டு இறந்து விட்டதாக அறிவித்தனர். இந்த நிலையில் திடீரென அங்கு போலீஸ் ஜீப் வந்து நின்றது. ஜீப்பிலிருந்து குதித்து வெளியே வந்த போலீஸார் அருள் செல்வியை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். சுதீருக்கு என்னாச்சு.. எப்படி இறந்தார் என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்கவும், அருள் செலவம் கதறி அழுதபடி பல உண்மைகளைக் கக்கினார்..

 பிளாஷ்பேக்...

பிளாஷ்பேக்...

சுதீருக்கு செக்ஸ் என்றால் ரொம்பப் பிரியம் போல. எப்பப் பார்த்தாலும் மனைவியுடன் விதம் விதமாக செக்ஸ் வைத்துக் கொள்ள துடிப்பாராம். குடி போதை வேறு.. தண்ணி உள்ளே போய் விட்டால்.. மனைவியை உண்டு இல்லை என்று செய்து விடுவாராம். மனைவியும் கணவராச்சே என்று பொறுத்துப் போயுள்ளார். ஆனாலும் சுதீரின் உறவுத் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போயுள்ளது. இருந்தாலும் கணவர் என்ற ஒரே காரணத்துக்காக அத்தனையையும் பொறுத்துப் போயுள்ளார் அருள் செல்வி.

 உறவு

உறவு

இந்த நிலையில்தான் சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த சுதீர், மனைவியுடன் வழக்கம் போல உறவுக்கு இறங்கியுள்ளார். அப்போது நல்ல குடிபோதையிலும் இருந்துள்ளார். மனைவியுடன் வழக்கம் போல முரட்டுத்தனமான உறவில் இறங்கிய அவர் முற்றிலும் இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட வலியுறுத்தியுள்ளார். அதைக் கேட்டு கோபமாகி விட்டார் அருள் செல்வி. முடியாது என மறுத்துள்ளார்.

அருள்செல்வி

அருள்செல்வி

ஆனால் சுதீர் நிற்கவில்லை. தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த அருள் செல்வி அவரிடமிருந்து விடுபட்டு வெளியேறினார். பின்னர் அடுக்களைக்குச் சென்று பாலில் தூக்க மாத்திரைகளைப் போட்டு அதை கட்டாயப்படுத்தி கணவருக்குக் கொடுத்தார். அவர் மயக்கமடைந்ததும் தனது சித்தி பாலாமணி மற்றும் அவரது மகன் சுமேர் ஆகியோரை வரவைத்தார். அவர்கள் வந்து பிளாஸ்டிக் பையை எடுத்து சுதீர் முகத்தில் இறுக்கி மூச்சுத் திணறடித்துக் கொலை செய்துள்ளனர்.

 ஆணுறுப்பு

ஆணுறுப்பு

சுமேர் அப்போது கோபாவேசமாக சுதீரின் ஆணுறுப்பை சரமாரியாக அடித்துள்ளார். அதில் ஆணுறுப்பும் சிதைந்து விட்டதாம். இந்த ஆணுறுப்பில் இருந்த காயம்தான் டாக்டர்களை யோசிக்க வைத்துள்ளது. கட்டிலிலிருந்து கீழே விழுந்தால் ஆணுறுப்பு இந்த அளவுக்கு சேதம் அடையாதே என்ற சந்தேகத்தில்தான் அவர்கள் நைஸாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

 பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

போலீஸார் வந்து விசாரிக்கவும்தான் சிக்கினார் அருள் செல்வி. இந்த விவரம் வெளியானதைத் தொடர்ந்து அருள் செல்வியை போலீஸார் கைது செய்தனர். கணவரின் பாலியல் தொல்லை தாங்காமல் உறவினர்களை வைத்து கொலை செய்த மனைவியால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
madurai murder: husband killed by wife and 3 arrested
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X