• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடியின் "கொத்தடிமைகள்!" அது தொண்டர் அணியல்ல! டெண்டர் அணி! மதுரையை அதிர வைத்த ஓபிஎஸ் ஆதரவு மா.செ

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் பேசிய ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷணன், எடப்பாடி அணிக்கு எதிராக சில காட்டமான கருத்துகளை முன் வைத்தார்.

Recommended Video

  எடப்பாடியின் கொத்தடிமைகள்! அது தொண்டர் அணியல்ல! டெண்டர் அணி!

  அதிமுகவில் உட்கட்சி பூசல் இன்னும் கூட முடியவில்லை. ஒரு புறம் தாங்கள் தான் அதிமுக என்று கூறி எடப்பாடி தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

  மேலும், கட்சியில் தனக்கு இருக்கும் ஆதரவை வலுப்படுத்தும் வகையில் தென் மாவட்டங்களுக்கும் அவர் சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது..

  அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு.. 4 பேர் பலி.. தாக்குதல் நடத்திய நபரை தேடும் போலீஸ்!அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு.. 4 பேர் பலி.. தாக்குதல் நடத்திய நபரை தேடும் போலீஸ்!

  ஓபிஎஸ்

  ஓபிஎஸ்

  அதேநேரம் மறுபுறம் இத்தனை காலம் அமைதியாக இருந்த ஓ. பன்னீர்செல்வமும் அடித்து ஆட ஆரம்பித்து உள்ளார். இன்னும் நான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று கூறும் ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் தனது ஆதரவாளர்கள் கட்சி பொறுப்புகளிலும் நியமித்து வருகிறார். இதற்கிடையே நேற்று காலை தான் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் உடன் தேனியில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தி இருந்தார்.

   பேரணி

  பேரணி

  அதைத் தொடர்ந்து நேற்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மதுரையில் ஒன்றுகூடி மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர். எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரே நேரத்தில் சுமார் ஐந்தாயிரம் பேர் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓபிஎஸ் தரப்பால் மதுரை மாநகர மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட கோபாலகிருஷணன் இந்த பேரணியை நடத்தினார்.

   கோபாலகிருஷணன்

  கோபாலகிருஷணன்

  அவர்கள் பேரணியாகச் சென்று எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் அங்குப் பேசிய கோபாலகிருஷணன், கடந்த ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்கள் சிறைக்குச் செல்வது உறுதி என்று காட்டமான கருத்துகளை முன் வைத்தார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "அதிமுகவைப் பாதுகாக்கவும் இந்த கழகத்தின் தொண்டர்களைப் பாதுகாக்கவும் தான் ஓபிஎஸ் தலைமையில் தொண்டர்கள் அணி வகுத்து உள்ளோம்.

   கொத்தடிமைகள்

  கொத்தடிமைகள்

  ஓ. பன்னீர்செல்வம் பக்கம் உள்ளவர்கள் தான் தொண்டர்கள் அணியைச் சேர்ந்தவர்கள். எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளவர்கள் டெண்டர் அணியைச் சேர்ந்தவர்களாகும். எதிர்ப்பக்கம் எடப்பாடி அணியில் உள்ளவர்கள் எல்லாரும் கட்சிக்கும், தொண்டர்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்தவர்கள். அவர்கள் இப்போது எடப்பாடி பழனிசாமியின் கொத்தடிமைகளாகவே உள்ளனர்.

   ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்

  ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்

  அவர்களுக்குத் தொண்டர் பலம் எதுவும் இல்லை. நாங்கள் தான் தொண்டர்கள் ஆதரவுடன் பலமாக நிற்கிறோம். ஓபிஎஸின் இந்தப் படை எழுச்சியுடன் தமிழகம் முழுக்க புறப்படப் போகிறோம். ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்ட ஒரு தலைவர் ஓபிஎஸ் மட்டுமே. ஜெயலலிதா வழிநடத்திய இயக்கத்தை ஓ.பன்னீர்செல்வத்தால் மட்டுமே தலைமை தாங்க முடியும்.

   தூய்மையாகும் அதிமுக

  தூய்மையாகும் அதிமுக

  அதிமுக தொண்டர்களைப் பாதுகாக்கவே ஓபிஎஸ் தலைமை ஏற்றுள்ளார். வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் வென்று, நிச்சயம் ஓபிஎஸ் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்பார். அதிமுக கூடிய சீக்கிரம் வடிகட்டப்படும். இன்னும் சிலர் வெளியேற்றப்பட்டால் அதிமுக தூய்மையாகிவிடும். இந்த இயக்கத்தில் இருக்கும் ஒன்றக் கோடி தொண்டர்களில் யார் வேண்டுமானாலும் நாளை இந்த கட்சியை வழிநடத்துவார்கள்" என்றார்.

  English summary
  O pannerselvam supporter slams edappadi palanisamy: (எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கு ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷணன்) ADMK latest news in tamil in tamil.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X