மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரை பாலமேட்டில் உற்சாகமாக ஜல்லிக்கட்டு- சீறிபாயும் 783 காளைகள்.. மாடுபிடி வீரர்கள் சாகசம்

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிகட்டு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 783 காளைகள் பங்கேற்றுள்ளன.

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நேற்று உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவின் 2-ம் நாளான மாட்டு பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது.

Madurai Palamedu gears up for today Jallikattu

Recommended Video

    மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு விறுவிறு.. சீறிப்பாயும் காளைகள்… ‘திமிலை’ அடக்கும் வீரர்கள்..!

    பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இன்று காலை மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு 8 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 783 காளைகள் பங்கேற்றுள்ளன. 649 பேர் மாடுபிடி வீரர்களாகவும் பதிவு செய்து சாகசங்களை காட்டி வருகின்றனர்.

    பெண்களை இழிவாக பேசிய உதயநிதி மன்னிப்பு கேட்டாக வேண்டும்.. குஷ்பு பெண்களை இழிவாக பேசிய உதயநிதி மன்னிப்பு கேட்டாக வேண்டும்.. குஷ்பு

    இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக காளைகளை நிறுத்தும் இடத்தில் உரிமையாளர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.

    கொரோனா கட்டுப்பாடுகளுடன் இன்று நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிட ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

    English summary
    Madurai Palamedu is gearing up for today Jallikattu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X