மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோலம்.. சாக்லேட்.. ரிப்பன்.. கொரோனாவை எதிர்கொள்ள செம திட்டம்.. அசத்தும் மதுரை அரசு மருத்துவமனை!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு இதற்காக ஸ்பெஷல் வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவ கூடியது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக சீனாவில் வுஹன் நகரம் மூடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது பெங்களூர், கேரளா வரை வந்துவிட்டது. கேரளாவில் 7 பேருக்கு இதற்கான அறிகுறிகள் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த 7 பேரை தற்போது தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Recommended Video

    6 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டும் சீனா| How China will build a hospital in 6 days ?

    அதேபோல் பெங்களூர், ஹைதராபாத்தில் பாதிக்கப்பட்ட 2 பேரையும் தனியாக வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இவர்களுக்கு நோய் தாக்கியது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    கொரோனா வைரஸ் பாதிப்பு - சீனாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே அகத்தியர் சொன்ன உண்மை கொரோனா வைரஸ் பாதிப்பு - சீனாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே அகத்தியர் சொன்ன உண்மை

    மதுரை

    மதுரை

    இந்த நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக அங்கு சளி, காய்ச்சல் உடன் அனுமதி ஆகும் மக்களுக்கு இலவச மாஸ்க் கொடுக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொடர்பாக சோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் அச்சம் இருப்பதாக கருதப்படும் நபர்களை தனி வார்டில் வைத்து சோதனை செய்து வருகிறார்கள்.

    அரசு மருத்துவமனை

    அரசு மருத்துவமனை

    மேலும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தற்போது இதற்காக 5 படுக்கைகள் கொண்ட தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நவீன வசதியுடன், அனைத்து சாதனங்களும் அடங்கி இந்த வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு வேறு நோயாளிகளுக்கு அனுமதி கிடையாது.

    என்ன வைரஸ்

    என்ன வைரஸ்

    கொரோனா வைரஸ் ஒரு நோயாளியிடம் இருந்து இன்னொரு நோயாளிக்கு தொடுதல் மூலம் பரவ கூடிய நோய் ஆகும். ஒரு நோயாளிகளுக்கு இது தாக்கினால் அருகில் உள்ளவர்களுக்கு இது தாக்கும். அதனால்தான் கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக சீனா மருத்துவமனையே கட்டுகிறது. அதேபோல்தான் தற்போது மதுரையில் தனியாக ராஜாஜி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கையாக வார்டு உருவாக்கி இருக்கிறார்கள்.

    அலங்காரம்

    அலங்காரம்

    இந்த வார்டை இன்று அலங்காரம் செய்து மிகவும் கோலாகலமாக திறந்து வைத்தனர். உள்ளே கோலம் போட்டு, பலூன் கட்டி பின் திறந்தனர். தலைமை மருத்துவர் ரிப்பன் வெட்டி மருத்துவமனையை திறந்து வைத்தார்கள். அங்கிருந்த மக்களுக்கு சாக்லேட் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. கொரோனா வைரஸை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகிறோம் , கண்டிப்பாக நோயாளிகளை தீவிரமாக பரிசோதிப்போம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Madurai Rajaji Government hospital opens up a special ward to treat Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X