மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊரடங்கின் போது அத்தியாவசிய பொருட்கள் உதவி.. நல்லெண்ண தூதரானார் மதுரை சலூன் கடைக்காரர் மகள்

Google Oneindia Tamil News

மதுரை: வளர்ச்சி, அமைதிக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் (UNADAP) நல்லெண்ண தூதராக மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா மோகன்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு பக்கம் பொருளாதார பாதிப்பு மறுபக்கம் கொரோனாவுக்கான செலவு என நாடே தவித்து வந்தது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிஎம் கேர்ஸ் என நிவாரண நிதியை பிரதமர் தொடங்கினார்.

குவைத்தில் இருந்து திருச்சி வந்த 120 பயணிகள்.. 2 பேருக்குக் காய்ச்சல்.. மருத்துவமனையில் அனுமதி குவைத்தில் இருந்து திருச்சி வந்த 120 பயணிகள்.. 2 பேருக்குக் காய்ச்சல்.. மருத்துவமனையில் அனுமதி

உதவி

உதவி

அது போல் அந்தந்த மாநில அரசுகளும் பொதுமக்களிடம் இருந்து நிவாரண நிதிக்கு உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் தங்களால் இயன்ற உதவியை இயலாதோருக்கு அளித்து வந்தனர்.

சமையல் எண்ணெய்

சமையல் எண்ணெய்

இந்த நிலையில் மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன் (47). ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்ட இவர் மதுரையில் சலூன் கடை நடத்தி வருகிறார். இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள், சமையல் எண்ணெய் ஆகியவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் (13) கல்விக்காக அவர் சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.

மோகன்

மோகன்

9ஆம் வகுப்பு படித்து வரும் நேத்ராவுக்கு ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. இது போன்ற சூழலில் தனது மகளின் கல்விக்காக வைத்திருந்த தொகையை ஏழை மக்களுக்கு செலவு செய்த சம்பவம் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவர் மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோகனுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

நியூயார்க்

நியூயார்க்

இந்த நிலையில்தான் வளர்ச்சி, அமைதிக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பான UNADAP- மோகனின் மகள் நேத்ராவை நல்லெண்ண தூதராக சிறப்பித்து அறிவித்துள்ளது. இத்தகவலை UNADAP தமது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறது. மேலும் ஜெனிவாவில் நடைபெறும் வறுமை குறித்த மாநாட்டிலும் நேத்ராவுக்கு உரையாற்றும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. தனது எதிர்கால கல்விக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை ஏழை மக்களுக்கு வழங்கியதை கவுரவிக்கும் வகையில் நேத்ராவை நல்லெண்ணத் தூதராக அறிவித்தது. இவருக்கு ஊக்கத் தொகையாக ரூ 1 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Madurai Saloon owner's daughter Nethra appointed as UN's Goodwill Ambassador. She is also getting the opportunity to speak at UN conferences in Newyork and Geneva.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X