மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இங்க பாருங்கய்யா.. எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க.. குழந்தைகளை கவர ரயில்பெட்டி போன்ற கிளாஸ் ரூம்ஸ்!

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று குழந்தைகளை குதூகலப்படுத்தும் வகையில் வகுப்பறைகளை ரயில் பெட்டி போன்று அமைத்திருப்பது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே தெற்கு ரயில்வே காலணியில் செயல்பட்டு வருகிறது மதுரா காலேஜ் மேல்நிலைப்பள்ளி. தமிழ் சங்கம் அருகே ரயில்வே ட்ராக்கை ஒட்டி இந்தப் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.

இந்தப்பள்ளியில் சுமார் மூன்றாயிரத்திக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகளை குதூகலப்படுத்தும் வகையில் ரயில்வே ட்ராக்கை ஒட்டியுள்ள மழலையர் வகுப்புகள் ரயில் பெட்டியை போன்று அமைக்கப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.

சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆகிறார்?... சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா பதில்சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆகிறார்?... சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா பதில்

தத்ரூபமாக ரயில் போன்று

தத்ரூபமாக ரயில் போன்று

வகுப்பறையின் கதவுகள், ஜன்னல்கள் நிறம் என அனைத்தும் உண்மை ரயிலைப் போன்றே உள்ளது. வகுப்பறையின் வாசற்படிகளும் ரயில் பெட்டியில் உள்ளதைபோன்றே தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஒரிஜினல் ரயிலுக்கு டாடா

ஒரிஜினல் ரயிலுக்கு டாடா

மரங்களுக்கு இடையே குலுங்கி செல்லும் ரயிலை போன்று உள்ள வகுப்புகளுக்கு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர் குழந்தைகள். மேலும் ட்ராக்கில் செல்லும் ஒரிஜினல் ரயில் பயணிகளுக்கும் நாங்களும் ரயிலில் அமர்ந்திருக்கிறோம் என்பதைப்போல் ஜன்னல் வழியாக டாடா காட்டி பெருமிதம் கொள்கின்றனர் குழந்தைகள்.

மக்கள் வியப்பு

மக்கள் வியப்பு

ரயில்வே ட்ராக் அருகே ஒரிஜினல் ரயிலுக்கு போட்டியாக பள்ளி நிர்வாகம் வகுப்பறைகளை ரயில் பெட்டிகள் போல் அமைத்திருப்பது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏறபடுத்தியுள்து.

வகுப்பறையின் வாசல்

இந்த ரயில் வகுப்பறைகள் மதுரை டூ சென்னை செல்லும் ரயிலை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ரயில் படியில் நின்றபடி பயணிகள் டாடா காண்பிப்பது போல் குழந்தைகளும் வகுப்பறையின் வாசலில் நின்று தங்களின் ரயில் பயணத்தை கொண்டாடுகின்றனர்.

இமைக்காமல் ரசிக்கலாம்

இமைக்காமல் ரசிக்கலாம்

உட்கார்ந்த இடத்தில் இருந்தது எத்தனை ரயில்களை வேண்டுமானாலும் இமைக்காமால் ரசிக்கலாம். பார்க்க பார்க்க.. ரசிக்க ரசிக்க திகட்டாத சிலவற்றில் ரயிலும் ஒன்று. அதுவும் சிறு குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம்.. ட்ராக்கில் செல்லும் ரயில்களை பிரமிப்புடன் பார்ப்பார்கள். அப்படிப்பட்ட ரயில் போன்ற வகுப்பறைகள் குழந்தைகளை கவர்ந்திழுக்காமல் இருக்குமா என்ன..!

English summary
Madura College Higher Secondary School, a school in Madurai, has designed class rooms as coaches of a train.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X