• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சிகள் மாறினாலும்..வரலாற்று சிறப்பான தீர்ப்பு -அரசு வழக்கறிஞர் மோகன்

Google Oneindia Tamil News

மதுரை: ஓமலூர் கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஏ1 யுவராஜ் என்று வழக்கறிஞர் ப.பா மோகன் கூறியுள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் ப.பா.மோகன் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ். பி.இ. பட்டதாரி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவரும், கல்லூரியில் உடன் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதி என்ற மாணவியும் நெருங்கி பழகி வந்தனர். சுவாதி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த 23.6.2015ம் தேதியன்று,வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிச்சென்றவர் அன்றிரவு வீடு திரும்பவில்லை. மறுநாளான 24.6.2015ம் தேதியன்று, கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.

கடலூரை தொடர்ந்து.. ஆரணி பேரூராட்சியில் 3 பெண் கவுன்சிலர்கள் கடத்தல்.. குழந்தையுடன் கணவர் தர்ணா கடலூரை தொடர்ந்து.. ஆரணி பேரூராட்சியில் 3 பெண் கவுன்சிலர்கள் கடத்தல்.. குழந்தையுடன் கணவர் தர்ணா

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அவர் சுவாதியை காதலிப்பதாக கருதிய ஒரு கும்பல், அவரை சாதிய ஆணவக்கொலை செய்திருக்கலாம் என்று தகவல்கள் பரவின.அதை ஊர்ஜிதப்படுத்துவதுபோல், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் முக்கிய தடயங்கள் கிடைத்தன. அதன்பேரில், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைதான நபர்களில் ஜோதிமணி என்பவர் குடும்பத்தகராறில் கொல்லப்பட்டார். ஜாமினில் சென்ற அமுதரசு தலைமறைவானார்.

 சாட்சிகள் விசாரணை

சாட்சிகள் விசாரணை

ஆணவக்கொலை வழக்குகளை 18 மாதங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து, கடந்த 30.8.2018ம் தேதி முதல் கோகுல்ராஜ் வழக்கில் சாட்சிகள் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. வழக்கில் முக்கிய சாட்சியான கோகுல்ராஜின் தோழி சுவாதி உள்ளிட்ட அரசுத்தரப்பு சாட்சிகள் பலர் அடுத்தடுத்து பிறழ் சாட்சிகளாக மாறினர். வன்கொடுமைக்கு எதிரான வழக்குகளை எடுத்து நடத்துவதில் அனுபவமற்ற வழக்கறிஞரை அரசுத்தரப்பில் நியமிக்கப்பட்டதால், கோகுல்ராஜின் தாயார் சித்ரா தரப்பினர் ரொம்பவே அதிருப்தி அடைந்தனர். அதனால் சித்ரா தரப்பில் சேலம் சந்தியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பார்த்திபன், தங்கள் தரப்புக்கு பவானி பா.மோகனை வழக்கறிஞராக நியமிக்கக் கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

உயர்நீதிமன்றம் உத்தரவு

உயர்நீதிமன்றம் உத்தரவு

அதன்பிறகு உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கோகுல்ராஜ் வழக்கில் அரசுத்தரப்பு வழக்கறிஞராக ப.பா.மோகனை நியமித்து உத்தரவிட்டதோடு, அதுவரை ஆஜராகி வந்த வழக்கறிஞர் கருணாநிதியை விடுவித்தும் உத்தரவிட்டது. தமிழக உள்துறை செயலரும் அனுமதி அளித்தார். இந்த உத்தரவு பெறப்படும்போது நாமக்கல் நீதிமன்றத்தில் 72 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு இருந்தது.

7 ஆண்டு கால வழக்கில் தீர்ப்பு

7 ஆண்டு கால வழக்கில் தீர்ப்பு

வழக்கறிஞர் ப.பா.மோகன், வழக்கு விசாரணையை சேலம் அல்லது ஈரோடு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால் உயர்நீதிமன்றமோ, வழக்கின் தொடர் விசாரணையை மதுரை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 8.5.2019ம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணை, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 ப.பா மோகன் பேட்டி

ப.பா மோகன் பேட்டி

யுவராஜ் உள்ளிட்ட 11 பேரும் குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ப.பா மோகன், பட்டியலினத்தைச் சேர்ந்த திருமதி சித்ரா அவர்களின் மகன் கோகுல்ராஜ், திருச்செங்கோடு பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மாணவர். அவரோடு படித்துக்கொண்டிருந்த சுவாதி கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பேசிக்கொண்டிருந்தனர்.

சாதி மாறிய காதலுக்கு எதிர்ப்பு

சாதி மாறிய காதலுக்கு எதிர்ப்பு

அப்போது அங்கு வந்த மாவீரன் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவைத்தலைவர் யுவராஜ், தனது கூட்டாளிகளுடன் சென்று கோகுல்ராஜை மிரட்டினார். அவரது இயக்கமே தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களை காதலிக்கக் கூடாது. குறிப்பாக தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களை காதலிக்கக் கூடாது என்ற கொள்கையை கொண்டிருக்கக் கூடியவர்.

 கடத்திப்போன யுவராஜ்

கடத்திப்போன யுவராஜ்

கோகுல்ராஜ் சுவாதியிடம் விசாரித்த யுவராஜ், அவர்களின் செல்போனை பறித்துக்கொண்டு தன்னோடு வந்த ஜோதிமணி, சந்திரசேகரன் ஆகிய தம்பதியுடன் சுவாதியை மட்டும் அனுப்பி வைத்தனர். கோகுல்ராஜின் கண்ணை கட்டி காரிலே கடத்திச் சென்று திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். கோகுல்ராஜை மிரட்டி பேச வைத்து ஆடியோவை பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து அன்றைய தினம் இரவு பள்ளிப்பாளையம் அருகே ரயில்வே டிராக்கில் கோகுல்ராஜின் தலையை வெட்டி வீசியுள்ளனர்.

கொடூரமாக வெட்டிக்கொலை

கொடூரமாக வெட்டிக்கொலை

யுவராஜ், அருண், சங்கர், குமார் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டுள்ளனர். கோகுல்ராஜை கொடூரமாக கொன்று தலையை சேதப்படுத்தி ரயில்வே டிராக்கில் போட்டு விட்டு உடலை தண்டவாளம் அருகே போட்டு செல்போனை பாக்கெட்டில் வைத்துள்ளனர். சுவாதியின் செல்போனை ஆற்றிலே விசி விட்டதாக வழக்கறிஞர் ப.பா மோகன் கூறினார்.

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு

இந்த வழக்கில் முதல் குற்றவாளி யுவராஜ் என்றும் வழக்கறிஞர் ப.பா. மோகன் தெரிவித்தார். இந்த கொலை வழக்கில் சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறிவிட்டனர். கோகுல்ராஜ் உடன் கூட இருந்த சுவாதியும் பிறழ் சாட்டியாக மாறினார். என்றாலும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆணவக்கொலை வழக்கில் இது மிகவும் முக்கியமான தீர்ப்பாக உள்ளது என்று தெரிவித்தார். கொடிய குற்றங்களை சாட்சிகள் பிறழ்ந்தாலும் சட்டத்தின் படி தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

English summary
Madurai special sessions court to deliver historical judgement in Gokulraj ‘honour’ killing case todayOn June 23, 2015, kidnapped 21-year-old dalit youth Gokulraj when he was with a female friend at a temple in Tiruchencode in Namakkal district in Tamil Nadu. On June 24, Gokulraj’s headless body was found near a railway track in Namakkal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X