மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சோர்ந்து போய் விட்டேன்".. நீட் தேர்வுக்கு தயாரான மதுரை மாணவி தற்கொலை.. பெரும் சோகம்

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஜோதி துர்கா தற்கொலை செய்து கொண்டார். நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் மாணவியின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம். இவர் சார்பு ஆய்வாளராக இருந்து வருகிறார். இவரது மகள் ஜோதி துர்கா (19). மருத்துவராகும் கனவுடன் இருந்த இந்த மாணவி கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

Jothi Durga

ஆனால் கடந்த ஆண்டு நடந்த தேர்வில் தோல்வி அடைந்துவிட்டார். இந்த நிலையில் நாளை அதாவது செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்காக ஜோதி துர்கா தயாராகி வந்தார்.

Madurai Student who prepares for Neet ExaQm commits suicide.

இதற்கு இரவு பகலாக படித்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த தேர்வில் தான் தேர்ச்சி பெறுவேனா மாட்டேனா என பெற்றோரிடம் மாணவி வேதனையுடன் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

Madurai Student who prepares for Neet ExaQm commits suicide.

இந்த நிலையில் அறையில் படித்துக் கொண்டிருந்த ஜோதி துர்காவுக்கு தேனீர் கொடுக்க அவரது தாய் அறைக்கு சென்ற போது ஜோதி துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

Madurai Student who prepares for Neet ExaQm commits suicide.

 விபரீத ராதா.. வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த கணவன்.. குழந்தைகளை உயிரோடு கொளுத்தி.. அறந்தாங்கி ஷாக் விபரீத ராதா.. வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த கணவன்.. குழந்தைகளை உயிரோடு கொளுத்தி.. அறந்தாங்கி ஷாக்

ஏற்கெனவே அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியை சேர்ந்த மாணவன் விக்னேஷ் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் கிணற்றில் குதித்து கடந்த 9-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் மாணவச் செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்.

English summary
Madurai Student who prepares for Neet Exam commits suicide. She was residing at Reserve line area in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X