மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிண்டல், கேலி, சித்திரவதை.. மதுரையில் தற்கொலை செய்த மாணவர்களின் பரிதாபக் கதை!

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரையில் தற்கொலை செய்த மாணவர்களின் பரிதாபக் கதை!-வீடியோ

    மதுரை: மதுரையில் 2 கல்லூரி மாணவர்கள் ராகிங் கொடுமையால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பரத் மற்றும் முத்துபாண்டி என்ற இரண்டு மாணவர்கள் படித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அதே கல்லூரியை சேர்ந்த முதலாம் ஆண்டு படித்து வரும் ஜெய்சக்தி என்ற மாணவன் பரத், முத்துபாண்டி ஆகிய இரண்டு மாணவர்களையும் அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளார்.

    Madurai students take suicide path after ragging

    அதேபோல் சக மாணவர்களும் ஜெய்சக்தி உடன் சேர்ந்து அடிக்கடி ராகிங் செய்து கொடுமைப்படுத்தியதாக தெரியவருகிறது. எப்போது பார்த்தாலும் கேலி, கிண்டல் செய்து சித்திரவதை செய்து வந்ததால் முத்துப் பாண்டி, பரத் ஆகிய இருவரும் மனம் உடைந்தனர். ஜெயசக்தியின் கொடுமை தாங்க முடியாமல் தொடர்ந்ததால் தற்கொலை செய்ய முடிவடுத்துள்ளனர்.

    மதுரையில் ராகிங் கொடுமை.. விஷம் குடித்த இரு கல்லூரி மாணவர்களில் மேலும் ஒருவர் பலிமதுரையில் ராகிங் கொடுமை.. விஷம் குடித்த இரு கல்லூரி மாணவர்களில் மேலும் ஒருவர் பலி

    இதையடுத்து விஷம் வாங்கிச் சென்று வீட்டுக்குப் போய் குடித்துள்ளனர். மயங்கிய நிலையில் இருவரும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 4 நாட்களுக்கு முன்பு தீவிர சிகிச்சையில் இருந்த பரத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முத்துப்பாண்டி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தற்போது ஜெயசக்தியைப் பிடித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல கல்லூரி முதல்வர் மற்றும் இறந்தவர்களின் பெற்றோர்களையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ராகிங் கொடுமையால் ஒரே கல்லூரியில் சேர்ந்த 2 மாணவர்கள் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Ragged Madurai students took suicide decision due to the stress they faced.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X