மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 நிமிஷம் லேட்டா வந்தா குற்றமா.. கம்பி கேட்டுக்கு வெளியே நிற்க வைத்த வேலம்மாள்.. மதுரையில் ஷாக்!

வேலம்மாள் பள்ளியில் மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    3 நிமிஷம் லேட்டா வந்தா குற்றமா?.. வெளியே நிற்க வைத்த வேலம்மாள்- வீடியோ

    மதுரை: 3 நிமிஷம் ஸ்கூலுக்கு லேட்டாக வந்துட்டாங்களாம் பிள்ளைகள். அதுக்காக இரும்பு கேட்டுக்கு வெளியே நிக்க வெச்சு தண்டனை தந்திருக்கிறார்கள். அதுவும் 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு.. கண்டிப்புக்கும், ஒழுங்குக்கும் பெயர் போன மதுரை வேலம்மாள் பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    சென்னை முகப்பேரில் 33 வருஷங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட வேலம்மாள் பள்ளிக்கூடம், இன்று பல மாவட்டங்களில் 40 பள்ளிக்கூடங்களாக, கல்லூரிகளாக, ஆஸ்பத்திரியாக உயர்ந்து உள்ளது.

    Madurai Velammal Vidyalaya Schools punishment for students

    நல்ல காசு.. நல்ல படிப்பு.. ஒழுக்கம்.. ரொம்ப கண்டிப்பு.. இதெல்லாம்தான் வேலம்மாள் பள்ளிக்கூடத்தை இந்த அளவுக்கு அசுர வளர்ச்சி பெற வைத்தது.

    ஆனால் இந்த கண்டிப்பு இப்போது ஓவர் டோஸ் ஆகிவிட்டது. மதுரையில் உள்ள வேலம்மாள் பள்ளியில் லேட்டாக 3-ம் வகுப்பு மாணவர்கள் வந்துள்ளனர். வெறும் 3 நிமிஷம் லேட்டுதான். அதற்காக அந்த பிள்ளைகளை இரும்பு கேட்டுக்கு வெளியே நிறுத்தி தண்டனை தந்திருக்கிறார்கள்.

    ஸ்கூல் கேட்டை மூடிவிட்டால் பிள்ளைகளுக்கு எப்படி பாதுகாப்பு? ரோட்டில் ஏதாவது குழந்தைகளுக்கு நேர்ந்தால் யார் பொறுப்பு? பள்ளியை நம்பிதானே பெற்றவர்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்கள்?

    சின்ன வயசு பொண்ணுங்களுடன் லூட்டி.. அடித்து கொலை செய்து சாக்கு பையில் கட்டிய மஞ்சுளா! சின்ன வயசு பொண்ணுங்களுடன் லூட்டி.. அடித்து கொலை செய்து சாக்கு பையில் கட்டிய மஞ்சுளா!

    இப்படித்தான் 2 குழந்தைகள் காலை முதல் மாலை வரை வெயிலில் காய்ந்து போய் நின்று கொண்டு இருந்திருக்கிறார்கள். ஒரு நிமிஷம் லேட்டாக வந்துவிட்டால் கேட் மூடி விடுவார்களாம். கட்டுப்பாடு என்றாலும் அதற்கு ஒரு அளவு வேண்டாமா?

    நேரம் தவறாமல் வரவேண்டும் என்றால், இப்போதுள்ள காலக்கட்டத்தில், இப்போதிருக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு எப்படி ஒத்துவரும்? என்பது தெரியவில்லை. ஆனால் எந்த கட்டுப்பாட்டுக்கு வேலம்மாள் பெயர் வாங்கியதோ, இப்போதே அதே கட்டுப்பாடுகளுக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்களின் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது.

    English summary
    Parents and public dissatisfied with Madurai Velammal Vidylaya Schools punishment for students
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X