மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியல் பேச மாட்டார்.. அரசியலே பேசும் தல.. மதுரையில் வைரல் கட் அவுட் வைத்த மனித கடவுள் அஜித் பேன்ஸ்!

Google Oneindia Tamil News

மதுரை: மேடை ஏறி அரசியல் பேசுபவர்கள் பல; மேடையே ஏறாமல் அந்த அரசியலே பேசும் நபர் எங்கள் தலதான் என்று மதுரையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாகவும், லாக்டவுன் காரணமாக தற்போது புதிய படங்கள் எதுவும் வெளியாவது இல்லை. முக்கியமாக பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் தற்போது ஆன்லைனில் கூட வெளியாவது இல்லை.

இதனால் தற்போது ஹீரோக்களின் பழைய வீடியோக்கள், படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று நடிகர் விஜயின் பிகில் படம் சன் டிவியில் ஒளிபரப்பாவதை விஜய் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள்.

அவர் இதயம் இன்னும் டிராக்கில்தான் இருக்கிறது.. அஜித் செம.. புகழ்ந்து தள்ளும் எம்எல்ஏ டிஆர்பி ராஜா! அவர் இதயம் இன்னும் டிராக்கில்தான் இருக்கிறது.. அஜித் செம.. புகழ்ந்து தள்ளும் எம்எல்ஏ டிஆர்பி ராஜா!

அஜித் வீடியோ

அஜித் வீடியோ

இன்னொரு பக்கம் நடிகர் அஜித்தின் பழைய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . அஜித் கார் ரேஸ் செய்த காலத்தில் பேசிய வீடியோக்கள் வைரலாகி வருகிறது . தான் எப்படி கார் ரேஸ் மேற்கொள்ள வந்தேன் என்று அவர் பேசிய வீடியோக்கள் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. அதேபோல் டி20 கிரிக்கெட் போட்டி குறித்து அவர் பேசியதும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

அஜித் வைரல்

அஜித் வைரல்

இந்த நிலையில் நடிகர் அஜித் குறித்து அவரின் ரசிகர்கள் வைத்த போஸ்டர் ஒன்று இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. மேடை ஏறி அரசியல் பேசுபவர்கள் பல; மேடையே ஏறாமல் அந்த அரசியலே பேசும் - அதான் எங்க தல" என்று அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர். மதுரையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளார்.

மதுரை

மதுரை

மதுரையில் இருக்கும் இந்த அஜித் ரசிகர் மன்றத்திற்கு மனித கடவுள் அஜித் ரசிகர்கள் மன்றம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது இதில் அஜித் குறித்து அரசியல்வாதிகள் பேசிய சில விஷயங்கள் இடம்பெற்றுள்ளது. அரசியல்வாதிகள் அவரை புகழந்தது இதில் குறிப்புகளாக இடம்பெற்றுள்ளது. மதுரையில் பல இடங்களை இந்த போஸ்டர் ஆக்கிரமித்து உள்ளது.

போஸ்டர் எப்படி

போஸ்டர் எப்படி

நடிகர் அஜித் சினிமாவிற்கு வந்து 28 வருடங்கள் ஆகிறது. இதை பெரிய அளவில் கொண்டாட அவரின் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போஸ்டர்களுக்கு பெயர் போன மதுரையில் இதேபோல் போஸ்டர் ஓட்டி அவரின் சினிமா வருகையை கொண்டாட இருக்கிறார்கள்.

English summary
Madurains posted political-related poster for Actor Ajith to celebrate 28 years of his cinema carrier.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X