• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

லூசிபர் பட பாணியில் இரண்டாவது மனைவியின் மகளை படுக்கைக்கு அழைத்த அப்பா - கொத்துக்கறியான கொடூரம்

|

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற ஊர். உலகப்புகழ் பெற்ற இந்த ஊரில் நடராஜ் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரிய வீட்டின் முன்பு ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அந்த வீட்டை நோக்கி சிலர் கையில் அரிவாளுடன் ஓடி வரவே பதை பதைத்துப்போன அந்த நபர் கதவை மூட முயற்சிக்கிறார், அதற்குள் கேட்டை திறந்து அந்த நபரை வெளியே இழுத்துப்போட்டு துடிக்கத் துடிக்க வெட்டி சாய்த்து விட்டு அசால்டாக நடந்து செல்கிறது அந்த கும்பல். இந்த கொடூர சம்பவம் அனைத்தும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

வெட்டிக்கொல்லப்பட்ட நபரின் பெயர் இளங்கோவன் என்பதாகும். 55 வயதாகும் இளங்கோவன் செல்லூரை பூர்வீகமாகக் கொண்டவர். பிரபல ரவுடி. வெட்டு குத்து என திரிந்தவர். இதனால் நிறைய எதிரிகளை சம்பாதித்து வைத்துள்ளார்.

எதிரிகள் தொல்லை அதிகரிக்கவே, அலங்காநல்லூருக்கு தனது இருப்பிடத்தை மாற்றினார். வட்டிக்குக் கடன் கொடுப்பது, பைனான்ஸ் தொழில் செய்து பிழைப்பை ஓட்டினார். நடராஜ் நகரில் இடம் வாங்கி பெரிய வீடு கட்டி குடியேறினார்.

அஸ்ஸாம் விமானம் விபத்தில் ஒற்றுமை..10 வருடத்துக்கு முன்பு... அதே இடம்.. அதே 13பேர்.. அதே மாதம்

இரண்டாவது மனைவி

இரண்டாவது மனைவி

இளங்கோவனின் முதல் மனைவி இறந்து போகவே, கணவனை இழந்த அபிராமி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் இளங்கோவன், அபிராமியின் மூன்று மகள்களுக்கும் அடைக்கலம் கொடுத்தார். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கணவன் இல்லாத தனக்கு கிடைத்த வாழ்க்கை மிகப்பெரியது என்று நினைத்தார் அபிராமி.

பாலியல் தொந்தரவு

பாலியல் தொந்தரவு

மகள் உறவு கொண்ட அபிராமியின் மூத்த மகள் அனுசுயாவை பாலியல் ரீதியாக அணுகினார் இளங்கோவன், உடம்பெல்லாம் கூசிப்போக இரவுகளில் அழுதார். அம்மாவிடமும் சொல்ல அதிர்ச்சியடைந்தார் அபிராமி. உடனே மகளுக்கு வேறு நல்ல இடம் பார்த்து திருமணம் செய்து கொடுத்தார்.

படுக்கைக்கு அழைத்த அப்பா

படுக்கைக்கு அழைத்த அப்பா

திருமணம் முடிந்து வேறு ஊருக்கு சென்ற பின்னரும் இளங்கோவனின் தொந்தரவு தொடர்ந்தது. செல்போனில் அம்மா அபிராமியிடம் சொல்லி கதறி அழுதார் அனுசுயா. லூசிபர் மலையாள படத்தில் தனது மகளுக்கு இரண்டாவது கணவனால் ஆபத்து என்பதை அறிந்த உடன் அண்ணனிடம் சொல்லி கொல்ல சொல்வார். அதே பாணியில் இளங்கோவனை கொல்ல கூலிப்படை ஏற்பாடு செய்தார் அபிராமி.

ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த அபிராமி

ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த அபிராமி

இளங்கோவனின் நடவடிக்கைகள் அனைத்தையும் ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த அபிராமி, வெள்ளிக்கிழமையன்று ரிலாக்ஸ் ஆக வீடடின் முன்புறத்தில் நின்று கொண்டிருந்த இளங்கோவனைப் பற்றி கூலிப்படையினருக்கு தகவல் சொன்னார். அப்போது முகமூடி அணிந்து கொண்டு வந்த கும்பல் இளங்கோவனை வெட்டி சாய்த்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த இளங்கோவனை பார்த்து விட்டு அசால்டாக நடந்து சென்றனர்.

இரண்டாவது மனைவி கைது

இரண்டாவது மனைவி கைது

மகள் உறவு கொண்டவள் என்றும் பாராமல் தகாத உறவுக்கு அழைத்த இளங்கோவனை, கூலிப்படை ஏவி தரமான சம்பவம் செய்து விட்டார் அவரது இரண்டாவது மனைவி அபிராமி. இன்று மூத்த மகளை இம்சை செய்தவன், உயிரோடு இருந்தால் மற்ற பிள்ளைகளையும் தொந்தரவு செய்வான் என்று கருதியே கொலை செய்ததாக அபிராமி வாக்குமுலம் கொடுத்திருக்கிறார். அனுசுயாவையும் அபிராமியையும் கைது செய்த போலீசார் கொலை செய்த கூலிப்படையினரை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Shocking crime surfacing on daylight, a man was brutally hacked to death in Alanganallur,Madurai District,The victim was identified as M Ilangovan, 55, a native of Sellur.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more