மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஞாயிறுதானே லாக்டவுன் நாங்க சனிக்கிழமையே கறி வாங்கிட்டோம்ல - விசிலடிக்கும் குக்கர்கள்

ஞாயிறு கிழமை என்றாலே குக்கர்கள் மட்டன், சிக்கன் வாசத்தோடு விசிலடிக்க ஆரம்பித்து விடும். முழு லாக்டவுன் அறிவித்து லீவு விட்டாலும் கவலையில்லை நாங்க சனிக்கிழமையே வாங்கிட்டு வந்து ப்ரிட்ஜில் வைத்து ஞாயிறன

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் எந்த மட்டன், சிக்கன், மீன் கடைகளும் திறக்கவில்லை காரணம் லாக்டவுன் முழு கட்டுப்பாட்டுடன் அமல்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் பிற மாவட்டங்களில் தளர்வுகளுடன் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் சனிக்கிழமையன்றே மட்டன் சிக்கன் மற்றும் மீன் கடைகளில் இறைச்சி விற்பனை படு ஜோராக நடைபெற்றது. ஞாயிறு லீவு நாளைக்கே லீவு விட்டாலும் கவலையில்லை சனிக்கிழமையன்றே நாங்க ஸ்டாக் வாங்கி வைத்துக்கொள்வோம் என்கின்றனர் பொதுமக்கள்.

ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக விடுமுறை தினம் என்பதால் நூற்றுக்கு தொன்னூறு சதவீத மக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர்களுக்கு பிடித்தமான இறைச்சியை வாங்கி சாப்பிடுவார்கள். எல்லாமே கொரோனா லாக்டவுனுக்கு முன்புதான். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் பலருக்கும் பொருளாதார நிலைமை டல்லடித்துப்போய்தான் இருக்கிறது என்றாலும் மனசுக்கு பிடித்த மாதிரி மட்டன் சிக்கன் என்று வாங்கி சாப்பிட்டு தெம்பாக இருப்போமே என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர்.

Meat lovers in TamilNadu face tough time in lockdown with meat purchase in Saturday

மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கோழிக்கறி, மீன் என இறைச்சி வகைகள் கடைகளில் வாங்கிச் சென்று வீட்டில் சமைத்து குடும்பத்தோடு சாப்பிட்டு சந்தோஷமாக பொழுதை கழித்து வந்தனர். தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் நிம்மதி பெருமூச்சு எழுந்த நிலையில் மீண்டும் ஞாயிறு மட்டும் முழு லாக்டவுன் என்றும் எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் முழு லாக்டவுன் என்பதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு விடும் என்று நினைத்து அட்வான்ஸ் ஆகவே சனிக்கிழமை மாலை முதல் இறைச்சி கடைகளில் கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. சில கடைகளில் விடிய விடியவும் ஒரு சில கடைகள் விடியற்காலை இரண்டு மணி முதல் காலை 6 மணி வரையும் கறி விற்பனை செய்தனர். சிலர் மறைவாக வீடுகளில் வைத்து விற்பனை செய்தனர்.

பெட்ரோல், டீசல் விலை அப்டேட் - டீசல் விலை 1 லிட்டர் ரூ. 78 ஆக உயர்வுபெட்ரோல், டீசல் விலை அப்டேட் - டீசல் விலை 1 லிட்டர் ரூ. 78 ஆக உயர்வு

சனிக்கிழமை இரவே மட்டன், சிக்கனை வாங்கி ஸ்டாக் வைத்தவர்கள் இன்று நிம்மதியாக கறி சமைத்து சாப்பிடுவார்கள். இன்று காலை முதலே பல வீடுகளில் மட்டன்,சிக்கன் வாசத்தோடு குக்கர்கள் விசிலடிக்க ஆரம்பித்து விட்டன. எங்க புள்ளீங்க எல்லாம் பயங்கரம்பா என்று யோசித்தாலும் மதுரைவாசிகள்தான் பாவம் கடந்த சில வாரங்களாவே கறி கடைகள் எதுவும் திறக்காமல் கவுச்சிவாடை வீட்டில் எதுவுமே இல்லாமல் கவலையில் ஆழ்ந்திருக்கின்றனர்.

English summary
Usual chicken centre opens in Saturday people bought meat and Chicken on Saturday evening . The shops shut till the end of the month as per the order of Madurai Corporation to deal with COVID-19 pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X