கொடூரமான ஆளுநர்! அரசு தரும் ஆவணத்தை படிக்கும் திறன் கூட இல்லை.. கவர்னர் மீது அமைச்சர் பிடிஆர் தாக்கு
மதுரை: ஆளுநர் ரவியை மிகக் கடுமையாக விமர்சித்த அமைச்சர் பிடிஆர், அரசு கொடுக்கும் ஆவணங்களைப் படிக்கும் திறன் கூட இல்லாத நபர் என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
மதுரையில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சு வெங்கடேசனை ஆதரித்து திமுக அமைச்சர் பிடிஆர் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் ஆளுநர் ரவியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அமைச்சர் பிடிஆர்: அப்போது பேசிய அமைச்சர் பிடிஆர், "இது சாதாரண தேர்தல் இல்லை. இதே தொகுதியில் நான் கடந்த காலங்களில் பல தேர்தல்களுக்காக வாக்கு கேட்டு வந்துள்ளேன். முதலில் தமிழ்நாடு கடைசி 3 ஆண்டுகளில் தவறான பாதையை விட்டுவிட்டு முன்னேறி இருக்கிறது. மக்கள் நலனுக்காக எண்ணற்ற நல்ல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல மதுரை மாநகராட்சிக்கும் மதுரை மத்திய தொகுதிக்கும் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன" என்று சொன்ன அவர் மகளிர் இலவச பயணம், உரிமை தொகை என்று மாநில அரசு கொண்டு வந்த திட்டங்களைப் பட்டியலிட்டார். மேலும், மதுரை மாநகராட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் அவர் விளக்கமாகப் பேசினார்.
மத்திய அரசு மீது சாடல்: தொடர்ந்து பேசிய அவர், "ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் மனித நேயமும் செயல்திறனும் இருக்க வேண்டிய ஆட்சி தான் மக்களின் ஆட்சி. அதைச் சிறப்பாகச் செய்து காட்டி இருக்கிறோம். ஆனால் மத்திய அரசு அனைத்து வகையிலும் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. நமக்கு வர வேண்டிய வரி பகிர்வை முறையாகத் தருவதில்லை. நாம் கடன் வாங்க இருக்கும் வழிகளையும் தடுக்கிறார்கள். பேரிடர்கள் வந்தால் கூட நிதி தருவதில்லை. மாநில உரிமைகளைப் பறிக்கிறார்கள்.
இவை எல்லாம் விட சென்னையில் ஒரு கொடூரமான ஆளுநரை வைத்துள்ளார்கள். அவருக்குத் தரும் கோப்புகளைக் கூட படிக்கும் திறன் இல்லாமல் இருக்கிறார். சட்டமன்றம் உருவாக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் கையெழுத்துப் போடாமல் சாப்பிட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டு இருக்கிறார். அங்கே பல கோடி ரூபாய் எங்கு போகுது என்றே தெரியவில்லை. நான் நிதியமைச்சராக இருந்த போது எதை எடுத்துக் கேட்டு இருக்கிறேன்.
கொடூரமான ஆளுநர்: இப்படி எதையும் ஒழுங்காகச் செய்யாத கொடூரமான ஆளுநரை இங்கே திணித்துள்ளார்கள். நமக்குத் தொல்லை தர வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்துள்ளார்கள். இந்த தோல்விகளை மறைக்கவே கச்சத்தீவு சர்ச்சையைக் கையில் எடுத்துள்ளனர். அதிலும் 7 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஆர்டிஐ பதிலில் உள்ள தகவலும் இப்போது வந்துள்ள தகவலும் முரணாக இருக்கிறது. ஆனால், இதை வைத்து தமிழகத்தை ஏமாற்ற முடியாது. இங்குள்ளவர்கள் படித்த மக்கள்.
இதுவரை 10 ஆண்டுகளில் செய்ததை அடுத்த 25 ஆண்டுகளில் செய்வேன் என்கிறார். இந்த 10 ஆண்டுகளில் என்ன செய்தார் எனப் பாருங்கள். நமது தனிநபர் பொருளாதாரத்தை வங்கதேசத்திற்கும் கீழ் இழுத்துச் சென்றுள்ளார். இப்படி இருக்கும் போது இன்னும் 25 ஆண்டுகள் வேண்டும் என்கிறார். உபி ஆஹா ஓஹோவேன இருக்கிறது என்றார்கள். ஆனால், உபி-இன் தனிநபர் உற்பத்தி பாகிஸ்தானை விட மோசமாக இருக்கிறது.
தேர்தல் பத்திரம்: தேர்தல் பத்திரம் என்ற உலக மாகா ஊழலை உருவாக்கி நிர்வாகப்படுத்தி இருக்கிறார்கள். சிபிஐ, ஐடி, அமலாக்கத் துறை வைத்துச் சம்பாதிக்க மட்டுமே அரசு நடத்தி வருகிறார்கள். தேர்தல் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து வெளியான தகவல்களை வைத்துக் கூறுகிறேன். இந்த நாட்டில் ஏற்கனவே ஜனநாயகம் செத்து விட்டது. இப்போது நம்மிடம் இருக்கும் கேள்வி செத்த பிணத்தை என்ன செய்யப் போகிறார்கள் என்பது தான்.
இவர்கள் மீண்டும் வென்று செத்த பிணத்தைக் கொண்டு போய் எரிக்கப் போகிறார்களா.. இல்லை பெரியபுராணத்தில் வருவது போல உயிரற்ற உடலில் உள்ள விஷத்தை மீண்டும் வெளியே எடுக்கும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருமா என்பதே கேள்வி" என்று அவர் பேசினார்.
-
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு.. விஜய் எதுவும் கருத்து சொன்னாரா? மருத்துவர் ஷர்மிளா கேட்ட கேள்வி! -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
“பைத்தியக்காரத்தனம்”.. திமுக சட்ட எரிப்பைக் கிண்டல் செய்த பெரியார்? கெடு விதித்த அண்ணா! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்!












Click it and Unblock the Notifications