• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பிரதமரையும், சீன அதிபரையும் தமிழகம் அழைத்து வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சர் உதயகுமார்

|

மதுரை: இந்திய பிரதமரையும் , சீன அதிபரையும் தமிழகத்திற்கு அழைத்து, தமிழன் புகழை உலகறிய செய்தவர், ஓய்வில்லா உழைப்பாளி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்றும், உழைப்பாலும், தொலைநோக்கு திட்டத்தாலும்தான் முதல்வர் கவுரவ டாக்டர் பெறுகிறார் என்றும், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன்,காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் பொதுத்தேர்வில் எப்படி சாதிக்க வேண்டும் என பேசினர்.

Minister R.B. Udhayakumar praises CM Edappadi Palanisamy over getting doctorate

பின்பு செய்தியாளர்கள் சந்தித்து பேசியபோது அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: தன் தாய் தந்தையர் புண்ணியத்தால் உழவராக, தாய் மண்ணில் பிறந்து உழைப்பால் தாய் தமிழ் நாட்டில் முதல்வராய் உயர்ந்து இன்றைக்கு, மதி நுட்பத்தாலும், அறிவாற்றலாலும் எளிமையாலும், கருணையாலும், நிர்வாகத் திறமையாலும், தொலை நோக்கு திட்டத்தாலும், மக்களின் செல்வாக்கிலும், கவுரவ டாக்டர் பட்டத்தை பெறுகின்றார் எடப்பாடி பழனிச்சாமி.

இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், சாமனிய முதல்வர், மாணவ சமுதாயத்தின் விடிவெள்ளி, இளைய சமுதாயத்தின் வழிகாட்டி முதல்வர், ''பாரத பிரதமரையும், சீன அதிபரையும் தமிழகத்திற்கு அழைத்து தமிழன் புகழை உலகறிய செய்த ஓய்வில்லா உழைப்பாளி முதல்வர்" அன்பின் அடையாளம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

முதல்வரின் வெற்றி பயணம் தொடர மதுரை மாவட்டத்தை சேர்ந்த 10,000 ம் இளைய சமுதாயம் பங்கு கொண்டுள்ள இந்த விழாவின் மூலம் தங்களுக்கு பாரட்டு தலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தீர்மான நகலை வாசித்து காண்பித்தார், அமைச்சர் உதயகுமார்.

நிகர்நிலை பல்கலைக்கழகமான டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28வது பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி.. நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு

இந்த பட்டமளிப்பு விழாவில் முதல்வர், எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் பட்டத்தை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர். டாக்டர் பற்றம் பெற்ற எடப்பாடி பழனிச்சாமி தனது உழைப்பால் இதை பெற்றதாக அமைச்சர் உதயக்குமார் இன்று வலியுறுத்தி தெரிவித்தார்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
R.B. Udhayakumar Minister for Revenue and Disaster Management and Information Technology, praises CM Edappadi Palanisamy over getting doctorate.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more