மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தகுதி அடிப்படையில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசுப் பணி.. அமைச்சர் ஆர் பி உதயகுமார்

Google Oneindia Tamil News

மதுரை: தகுதி அடிப்படையில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க முதல்வரிடம் வலியுறுத்தப்படும் என அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசுகையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை அனைத்து துறைகளும் செய்துள்ளன. அதிமுகவின் அம்மா பேரவை சார்பில் சிறந்த காளையின் உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களுக்கும் முதல்வர், துணை முதல்வர் சார்பில் கார்கள் பரிசாக வழங்கப்படுகிறது.

Minister R.B.Udhayakumar says Priority will be given in Government jobs

அந்த வகையில் இந்த ஆண்டும் சிறந்த வீரருக்கும் காளை உரிமையாளருக்கும் கார் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

காணும் பொங்கல்.. நம்ம மக்கள் செய்த வேலையை பாருங்க.. மெரினா கடற்கரையில் மட்டும் 12 டன் குப்பைகாணும் பொங்கல்.. நம்ம மக்கள் செய்த வேலையை பாருங்க.. மெரினா கடற்கரையில் மட்டும் 12 டன் குப்பை

அவர்களுடைய விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். கிராமப்புற இளைஞர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், வீர விளையாட்டுகளின் தரத்தை மேம்படுத்தவும் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அவர் கூறியிருந்தார்.

மேலும் மாடுபிடியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு கார் பரிசளிப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் ஏழ்மை காரணமாகவும் வீட்டில் நிறுத்த இடமில்லாததாலும் அவற்றை வீரர்கள் விற்றுவிடும் நிலை ஏற்படுகிறது. எனவே வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என வீரர்கள் கேட்டு கொண்டனர்.

English summary
Priority will be given to Jallikattu winners in Government jobs, says Minister R.B.Udhayakumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X