மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Kanimozhi slams EPS | ஸ்டாலின், ப சிதம்பரம் குறித்த முதல்வரின் பேச்சால்.. கோபத்தில் கனிமொழி- வீடியோ

    மதுரை: திமுகவில் முக அழகிரியை போல் கனிமொழியையும் ஒதுக்கி வைக்க வாய்ப்புள்ளது என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் புதுப்பிக்கப்பட்டு உள்ள இசையுடன் கூடிய நீர் ஊற்று மற்றும் ஒளிக்கதிரை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

    அவருடன் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்
    திமுக ஸ்டாலினுடைய குடும்ப கட்சியாகவே மாறிவிட்டது.

    வேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்? வேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்?

    ஒதுக்க வாய்ப்பு

    ஒதுக்க வாய்ப்பு

    இப்போதவாது கனிமொழியை பேச அனுமதித்துள்ளாரே. ஆனாலும் கனிமொழி பார்த்து நடந்துக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே கட்சியில் இருந்து அழகிரி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். அது போல் கனிமொழியையும் ஒதுக்கி வைக்க வாய்ப்புள்ளது.

    இரண்டாக பிரிக்க

    இரண்டாக பிரிக்க

    நூலிழையில் உயிர் தப்பியது போன்ற பழமொழியைப் போல் வெறும் எட்டாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றிப் பெற்றுள்ளன. தற்போது மதுரை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வாய்ப்பு இல்லை.

    எதிர்காலத்தில்

    எதிர்காலத்தில்

    நாகை, கோவை போன்ற சட்டமன்ற தொகுதி அதிகம் உள்ள மாவட்டங்கள் உள்ளன. எதிர்காலத்தில் வேண்டும் என்றால் மக்களின் கோரிக்கை ஏற்று நடக்கலாம் என்று கூறினார்.

    ரஜினி கட்சி

    ரஜினி கட்சி

    கமல்ஹாசன் திரைத்துறையில் வேண்டுமானால் முதல்வர் ஆகலாம் என நேற்று மதுரையில் நடந்த ஒரு விழாவில் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். மேலும் ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும் அப்புறம் அவர் அதிமுக கூட்டணியில் இணைவாரா இல்லையா என்பதை பார்க்கலாம் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Minister Sellur Raju says that like MK Alagiri, Kanimozhi can also be sidelined in DMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X