மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்பப்ப குரல் கொடுப்பார்.. அப்புறம் இந்தியன் 2வில் நடிக்கப் போய்ருவார்.. அடடே செல்லூர் ராஜு!

Google Oneindia Tamil News

மதுரை: பட்ஜெட் பற்றி கருத்து கூறுவதற்கு முன்னால் அவர் அதை படித்து பார்க்க வேண்டும். அவர் இடை இடையே கருத்து கூறுவார். பின்னர் இந்தியன் 2 வில் நடிக்க போய்டுவார் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

நம்ம மதுரை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளிக்கையில் மதுரை மாநகராட்சி சார்பில் "நம்ம மதுரை" என்ற நிகழ்ச்சி இரண்டாவது நாளாக மதுரை தெப்பக்குளம் பகுதியில் இன்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார் . மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் , துணை ஆணையர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கலை நிகழ்ச்சிகள்

கலை நிகழ்ச்சிகள்

தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக் காட்டக் கூடிய சிலம்பாட்டம், பொய்க்கால் ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், நேற்றைய தினம் மத்திய பட்ஜெட்டில் சிறப்பான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிந்தித்து

சிந்தித்து

விவசாயி, ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்ககூடியது வகையில் அமைந்துள்ளது. எடுத்தவுடன் பட்ஜெட் பற்றி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறை கூறுகிறார். இனிமேல்தான் பட்ஜெட் குறித்து தெரியும். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எப்போதுமே அவசரப்பட்டு பேசக்கூடியவர். எதையுமே சிந்தித்து பேசக் கூடியவர் அல்ல.

வாடிக்கை

வாடிக்கை

அவரிடம் இருந்து என்ன வரனுமோ அந்த கருத்து தான் வந்துள்ளது. பட்ஜெட் குறித்த நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துவிட்டு போய்விடுவார். இடை இடையே குரல் கொடுப்பார். இதையே வாடிக்கையாக வைத்துள்ளார் கமல்ஹாசன்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

நடிகர் என்ற இமேஜ்க்காக கருத்து சொல்கின்றனர். படித்து பார்த்து கமல்ஹாசன் கருத்து சொல்ல வேண்டும். பட்ஜெட் எடுத்தவுடன் தாக்கல் செய்யப்படாது. விவாதம் செய்யப்பட வேண்டும். நாடளுமன்றத்தில் பட்ஜெட் குறித்து விவாதம் நடக்கும் போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பேச வேண்டியதை கவனித்து ஸ்டாலின் பேச வேண்டும் என தெரிவித்தார்.

English summary
Minister Sellur Raju condemns Kamal haasan for his budget comment. He also condemns DMK President MK Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X