மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு நல்ல எழுத்தாளரை திமுகவிற்கு காவு கொடுத்து விட்டார்கள்.. செல்லூர் ராஜு கடும் விமர்சனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வெங்கடேசன் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்-வீடியோ

    மதுரை: ஒரு நல்ல எழுத்தாளரை திமுகவிற்கு காவு கொடுத்து விட்டார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வெங்கடேசன் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.

    மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் பாராளுமன்ற வேட்பாளரின் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் செல்லூர் ராஜு மேடையில் பேசியதாவது: பாலுடன் தண்ணீர் ஊற்றினால் இணையும். ஆனால் கண்ணீருடன் எண்ணெய் ஊற்றினாள் இணையுமா? அது போன்று தான் எதிர்க்கட்சிகளும்.

    மோடிஜியும், ஜெயலலிதா அவர்களும் மிக சிறப்பாக அன்பு பாராட்டியவர்கள். அப்படிப்பட்ட ஒருவரை பிரதமராக முடிவு செய்துள்ளது அதிமுக.

    திமுக ரவுடிசம்

    திமுக ரவுடிசம்

    மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை பார்த்து கேட்கிறேன் பதவிக்காக கூட்டணியா? திமுக எங்களை கூட பதம் பார்க்கவில்லை உங்களை ரவுடிகளை வைத்து அதிகம் அடித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தனிக்கொள்கை உள்ளதா? என்ன திறமை இருக்கிறது?

    தமிழிசையின் வேட்புமனு நீண்ட இழுபறிக்குப் பிறகு ஏற்பு... ஆனா.. அமமுக வேட்பாளர்கள்தமிழிசையின் வேட்புமனு நீண்ட இழுபறிக்குப் பிறகு ஏற்பு... ஆனா.. அமமுக வேட்பாளர்கள்

    யூடியூபில் போடுவார்கள்

    யூடியூபில் போடுவார்கள்

    எங்கள் தோளில் அல்லது திமுக தோலை பிடிப்பது தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேலை, ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க. ஆனா, சொல்ல மாட்டேன். பழமொழி சொன்னா கூட யூடியூபில் போட்டு விட்டுவிடுவார்கள். அதற்கு கூட புகார் கொடுக்க போய்விடுவார்கள் அந்தத் தோழர்கள். கட்சி வேலை செய்கிறார்களோ இல்லையோ புகார்கள் கொடுப்பது மட்டும் சரியாக செய்து விடுகிறார்கள்.

    காவு கொடுத்து விட்டார்கள்

    காவு கொடுத்து விட்டார்கள்

    மதுரை பற்றிய மிக, மிக அருமையாக எழுதிய வெங்கடேஷின் கட்டுரைகளை நான் படித்துள்ளேன். தமிழ் அறிந்த ஒரு அறிஞரை அவர்கள் காவு கொடுத்து விட்டார்கள் என்று கேட்பது தவறா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், திமுகவும் கொள்கை அடிப்படையில் கூட்டணி வைத்துள்ளார்களா?

    வைகோ அடகு வைத்து விட்டார்

    வைகோ அடகு வைத்து விட்டார்

    கலைஞர் பற்றியும் ஸ்டாலினை பற்றியும் நாங்கள் பேசியதை விட மேடை அமைத்து கேவலம், கேவலமாக பேசியவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்கள், வைகோ கட்சியை அடகு வைத்து விட்டார். அவருக்காக பல தொண்டர்கள் உயிர்த்தியாகம் செய்தார்கள்.

    பழமொழி விளக்கம்

    பழமொழி விளக்கம்

    நம்முடைய ஊர்களில் சொல்லுவார்கள் மாப்பிள்ளையை தெரியாமல் பொண்ணு கேட்பது போல, தலைவரே இல்லாமல் பிரதமர் வேட்பாளருக்கு ஓட்டு கேட்பது எப்படி நம் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

    வெங்கடேசன் சிக்கிக்கொண்டார்

    வெங்கடேசன் சிக்கிக்கொண்டார்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பயில்வானாக இருக்கும் போதே நாங்கள் அவருடன் பணியாற்றியுளோம். தற்போது அவர்கள் நோஞ்சான் ஆகிவிட்டார்கள். ஒன்று, இரண்டு தலைவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களிடம் போய் வெங்கடேஷ் சிக்கிக் கொண்டார் என்ற வருத்தம்தான்? என தெரிவித்தார்.

    English summary
    Minitster Sellur Raju has criticised CPM candidate S Venkatesan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X