மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடிநீர் பிரச்சனை இல்லன்னு செல்லூர் ராஜு சொல்வது டாஸ்மாக் தண்ணீரை.. திமுக எம்எல்ஏ பதிலடி

Google Oneindia Tamil News

Recommended Video

    அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு திமுக எம்எல்ஏ பதிலடி

    மதுரை: மதுரையில் குடிநீர் பிரச்சினை இல்லை என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருப்பது, அனைவரும் பருகும் தண்ணீரை பற்றி அல்ல. குடிமகன்கள் குடிக்கும் டாஸ்மாக் தண்ணீரை தான் அப்படி சொல்லியுள்ளார் என, திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் விமர்சித்துள்ளார்.

    திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் திறந்து வைத்தார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,வெற்றி பெற்ற பின்பு அனைத்து பகுதிகளுக்கும் சென்று நன்றி அறிவிப்பை தெரிவித்திருக்கிறேன்.

    Minister sellur raju said water problem not in tasmac..DMK MLA retaliation

    மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் குடிநீர் பிரச்சனை அதிகமாக இருக்கிறது என்று குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த ஆட்சியில் 8 வருடமாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மோசமான நிலையில் இருந்தது. இன்று அலுவலகத்தை சுத்தப்படுத்தி தயார் செய்து வைத்துள்ளோம்.

    கடந்த 8 ஆண்டு காலமாக சட்டமன்ற உறுப்பினரை நாங்கள் கண்ணில் கூட பார்த்ததில்லை என்று பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    அடுத்து வரும் 2 வருட முடிவில் திமுக ஆட்சி அமைக்கும் என்றார் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன்.

    மேடையில் டென்ஷன்.. சட்டத்துறை செயலருடன் வாக்குவாதம்.. பாதியிலேயே கிளம்பிய சிவி சண்முகம் மேடையில் டென்ஷன்.. சட்டத்துறை செயலருடன் வாக்குவாதம்.. பாதியிலேயே கிளம்பிய சிவி சண்முகம்

    சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்களின் வசதிக்காக இ சேவை மையம் அமைக்கப்பட உள்ளது. மக்கள் அனைவரும் நேரடியாக வந்து புகார்களை தெரிவிப்பதற்கு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது. மதுரை மாநகரில் 100 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சனை இல்லாமல் சீராக இருக்கிறது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறாரே என சட்டமன்ற உறுப்பினரான சரவணனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இது குறித்த கருத்துக்கு "கூட்டுறவுத் துறை அமைச்சர் கூறியது குடிதண்ணீர் அல்ல. டாஸ்மாக் தண்ணீரை சொல்லி வருகிறார் என காட்டமாக விமர்சித்தார் சரவணன்

    திருப்பரங்குன்றம் தொகுதியில் 90 பள்ளிகள் உள்ளது, அனைத்து பள்ளிகளிலும் முறையான கழிப்பறை வசதிகளும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை.

    எனவே அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகளும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்துதர ஏற்பாடு செய்யப்படும். மீதமுள்ள இரண்டு வருடத்தில் நான் மக்களிடத்தில் நல்ல பெயர் எடுப்பேன் என்றுஇ என்னை தடுப்பதற்கு பல இடையூறுகளை ஆளுங்கட்சியினர் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று தெரிவித்தார்.

    English summary
    Minister of Cooperatives Selur Raju has said that drinking water is not a problem in Madurai, but not about drinking water. The DMK legislator Dr Saravanan has criticized
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X