மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பணப்பட்டுவாடாவா.. வேணும்னா என் வீட்டில கூட ஐடி ரெய்டு நடத்தலாம்.. அமைச்சர் செல்லூர் ராஜூ

Google Oneindia Tamil News

மதுரை: சந்தேகமிருந்தால் என் வீட்டுக்கு கூட வருமான வரித் துறையினர் வரட்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பழங்கள் மற்றும் காய்கறி வணிக வளாகத்தில் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் மதுரை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் உடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார்.

அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் செய்தியாளர்களிடம் பேசுகையில் பழங்கள் மற்றும் காய்கறி வணிகர்கள் முழு ஆதரவு கொடுத்து உள்ளனர், மார்க்கெடில் அடிப்படை வசதிகள் செய்து தர கேட்டு உள்ளனர். வியாபாரங்களை ஒரு புள்ளியில் இணைக்க நடவடிக்கைகள் என தெரிவித்தார்.

அனிதா யாரு.. நம்ம பொண்ணுதானே.. தங்கச்சிதானே.. பழிவாங்கணும்.. அந்த நாள் ஏப்ரல் 18.. உதயநிதி ஸ்டாலின் அனிதா யாரு.. நம்ம பொண்ணுதானே.. தங்கச்சிதானே.. பழிவாங்கணும்.. அந்த நாள் ஏப்ரல் 18.. உதயநிதி ஸ்டாலின்

ஸ்டாலின்

ஸ்டாலின்

பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் "திமுக நாகரிகம் அற்ற நிலையில் தான் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் தனி நபர் விமர்சனத்தை திமுக முன் வைக்கிறது. சொல்வதற்கு ஒன்றும் இல்லாதால் அதிமுகவை குறை சொல்லி வருகிறார் ஸ்டாலின்.

தனி விமர்சனம்

தனி விமர்சனம்

தமிழகத்தை இருளில் முழுக்க வைத்தது திமுக, 2 ஜி ஊழல் உள்ளிட்ட 5 ஊழல்கள் செய்த பணம் இன்னும் திமுகவிடம் உள்ளது. திமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. திமுக மீது வருமானவரித் துறையை ஏவி விடவில்லை. ஸ்டாலின் அதிமுக மீது தனி விமர்சனம் செய்து வருகிறார்.

விழாது

விழாது

நடிகர், நடிகைகளை பார்க்க கூட்டம் கூடும் என பேசினேன். மதுரை மக்களை தரம் குறைவாக விமர்சனம் செய்யவில்லை. கமல்ஹாசன் அழகாக இருக்கிறார். ஆனால் அவருக்கு ஒட்டு விழுகாது. தேர்தலுக்காக மட்டுமே வருகிறார்.

மோடி

மோடி

நடிகர்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் அரசியலுக்கு வரும் நடிகர்கள் உடனடியாக முதல்வர் ஆக வேண்டும் என்கிற கனவில் உள்ளனர். நாங்கள் மோடி புகழை மட்டுமே சொல்லவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகழையும் சொல்கிறோம், நாடாளுமன்ற தேர்தல் என்பதால் மோடியை முன்னிலை செய்கிறோம், நாடாளுமன்ற தேர்தலில் மோடி மட்டுமே கதாநாயகன் என்றார்.

தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு

சித்திரை முதல் நாள்: மதுரையில் இன்று அ.தி.மு.க. சார்பில் சித்திரை முதல் நாள் பாரம்பரியத்தில் வேரூன்றி, நவீன மதுரையை நோக்கி என்ற தலைப்பில் தமிழ் புத்தாண்டு பேரணி நடைபெற்றது. மதுரை தமுக்கம் மைதானம் அருகே உள்ள, தமிழன்னை சிலைக்கு அபிஷேகம் செய்து பொங்கல் வைத்து, பூஜை செய்து வழிப்பாடு நடத்தினர்.

பிரசாரம்

பிரசாரம்

இந்த நிகழ்வில் அமைச்சர் செல்லூர் ராஜூ, சட்ட மன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, அதிமுக மதுரை பாராளுமன்ற வேட்பாளர் ராஜ் சத்யன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், கட்டைக் காலாட்டம், காளையாட்டம் , மற்றும் ஜல்லிக்கட்டு காளையுடன் 300க்கும் மேற்பட்டோர் உலக தமிழ்ச் சங்கம் வழியாக இலந்தைகுளத்தில் உள்ள தொழில்நுட்ப பூங்காவிற்கு சென்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவம் பொறித்த முகமூடி அணிந்துகொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

உலக தமிழ்

உலக தமிழ்

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தமிழ் வளர்ச்சிக்காக திமுக தற்போது எதுவுமே செய்யவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியது போல தமிழன்னை சிலை உலக தமிழ் சங்க கட்டடத்தில் நிறுவப்படும் என்றார்.

சுயேச்சை

சுயேச்சை

திமுகவினர் 4 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டார்களே என்ற கேள்விக்கு? ஆரம்பம் முக்கியமல்ல முடிவு தான் முக்கியம் எனக் கூறினார். சுயேச்சை வேட்பாளர்கள் மூலம் அதிமுக பணம் பட்டுவாடா செய்து வருகிறது என்று புகார்கள் அதிகமாக வருகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, நானே மிகவும் அப்பாவியாக இருக்கிறேன்.

ராஜ்சத்யன்

ராஜ்சத்யன்

நாங்கள் எதற்கு பணம் பட்டுவாடா செய்ய போகிறோம். வேண்டுமென்றால் என் வீட்டையும் வாகனத்தையும் சோதனை செய்யுங்கள். நான் ஒரு சாதாரண தொண்டனாக அதிமுகவில் பணியாற்றி வருகிறேன். தற்போது வேட்பாளர் ராஜ் சத்யனுக்கு பிரச்சார வேலை செய்து வருகிறேன் என்று தெரிவித்தார்.

English summary
Minister Sellur Raju criticises DMK and says that IT official can also come to my house for Raid.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X