மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பட விளம்பரத்துக்கு கதையை பத்தி பேசுங்க.. நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர் உதயக்குமார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Vijay speech in Bigil Audio launch | சுபஸ்ரீ மரணம் குறித்து நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு

    மதுரை: திரைப்பட விளம்பரத்துக்கு அந்தப்படத்தின் முக்கியத்துவம், கதை உள்ளிட்டவை குறித்து பேசுவதற்கு பதில், குறிப்பிட்டவர்களை விமர்சனம் செய்தால் விளம்பரம் கிடைக்கும் என்ற நோக்குடன் நடிகர்கள் பேசுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.

    மதுரை திருமங்கலம் அருகே கப்பலூரில் அ.தி.மு.க. அம்மா பேரவையின் சார்பில் உழைக்கும் ஆண்கள் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

    minister udayakumar attacks actor vijay over his politics comments

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், நடிகர் விஜய் உள்ளிட்டோரின் கருத்துக்கள் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு உதயக்குமார், அவர்கள் தங்கள் நிலையை உணர்ந்து பேச வேண்டும் என்று தெரிவித்தார்.

    அரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்!அரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்!

    திரைப்பட விளம்பரத்துக்கு அந்தப்படத்தின் முக்கியத்துவம், கதை உள்ளிட்டவை குறித்து பேசுவதற்கு பதில், குறிப்பிட்டவர்களை விமர்சனம் செய்தால் விளம்பரம் கிடைக்கும் என்ற நோக்குடன் நடிகர்கள் பேசுகிறார்கள் என குற்றம்சாட்டினார்.

    பொது வாழ்க்கைக்கான இலக்கணம் குறித்து கருத்து கூறும் நடிகர்கள் பரபரப்புக்காகவும், விமர்சனத்துக்காகவும் பேசுவதாக அமைச்சர் விமர்சித்தார்.

    நடிகர் கமல்ஹாசனின் விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், விரிவான பார்வைக்குப் பதில் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற சுயநலப்பார்வை கமலுக்கு இருப்பதாக விமர்சித்தார்.

    English summary
    minister udayakumar attack actor vijay over his politics comments. he said if need promotion for film, should speak about film story don't talk other things.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X