மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீரென காரை விட்டு இறங்கிய விஜயபாஸ்கர்.. முகமெல்லாம் அதிர்ச்சி.. ஹைவேஸில் நடந்த "அந்த" சோகம்

விபத்தில் பசுமாடு சிக்கியதால் அதற்கு சிகிச்சை தந்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்

Google Oneindia Tamil News

மதுரை: எவ்வளவோ சிகிச்சை தர முயற்சித்தும் அந்த ஜீவனை காப்பாற்ற முடியவில்லை.. இறுதியில் உயிரிழந்த பசுமாட்டினை கண்டு அதிர்ந்து போனார் அமைச்சர் விஜயபாஸ்கர்!

வழக்கமாக அமைச்சர்கள் காரில் எங்காவது வெளியூர் சென்று கொண்டிருந்தால், வழியில் யாராவது ஆபத்தில் இருந்தால் அவர்களுக்கு உதவுவது வழக்கம்.. விபத்தில் பலர் சிக்கி இருந்தாலும், உடனடியாக தங்கள் காரை நிறுத்தி, முதலுதவி சிகிச்சைக்கு உதவுவார்கள்.

அந்த வகையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் பலமுறை உதவி செய்திருக்கிறார்.. ஒருநாள் திருச்சி ஏர்போர்ட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார்... அப்போது, குளத்தூர் இளையாவயல் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே வரும்போது, ஒரு பெண் கீழே ரத்தம் கொட்டிய நிலையில் விழுந்து கிடந்தார்.

கர்சீப்

கர்சீப்

அந்த பெண்ணின் பெயர் மேரி.. இதை பார்த்து பதறியதும் காரை விட்டு கீழே இறங்கிய அமைச்சர் ஓடோடி சென்றார்.. மேரியின் முகமெல்லாம் ரத்தம் வழிந்தது.. தன்னுடைய கர்சீப்பால் ரத்தத்தை துடைத்த அமைச்சர், தானே முதலுதவி சிகிச்சையும் தந்து, அதன்பிறகு மேரியை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வழிவகை செய்தார்.

 விபத்து

விபத்து

இன்னொருநாள், சென்னையில் விபத்தில் அடிபட்டு கிடந்த ஒருவரை, தனது காரிலேயே அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தார். இதுபோலவே இப்போது இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.. விராலிமலை அருகே, திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கர்ப்பிணி பசு மாடு ஒன்றினை, ஒரு கார் வேகமாக வந்து மோதிவிட்டது.. இதனால், அந்த பசு உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

 விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

அப்போது மதுரையில் இருந்து விராலிமலைக்கு, காரில் விஜயபாஸ்கர் வந்து கொண்டிருந்தார்.. பசு மாட்டினை பார்த்ததும், வண்டியை நிறுத்திவிட்டு, சிகிச்சை அளிக்க டாக்டரை தொடர்பு கொண்டு பேசினார்.. அதன்பிறகு இன்ஸ்பெக்டர், சுங்க சாவடி மேலாளரிடம் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை உடனடியாக சுங்க சாவடியில் நிறுத்தி போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வர உத்தரவிட்டார்.

 கர்ப்பிணி பசுமாடு

கர்ப்பிணி பசுமாடு

அதன்பிறகு, பசுவிற்கு காலில் ஒரு கட்டு கட்டி, முதலுதவி செய்தார்.. ஆனால் சிகிச்சை தந்து கொண்டிருந்த பொழுதே பசுமாடு உயிரிழந்தது... இதனால் அதிர்ந்து போனார் அமைச்சர்.. கர்ப்பிணி பசு உயிரிழந்த சோகத்தில், அதன் உரிமையாளர் கண்ணீர் வடித்தார்.. அவருக்கு ஆறுதல் சொன்ன அமைச்சர், இழப்பீடு தொகை அரசு சார்பில் கிடைக்க வழி செய்து தருவதாக உறுதி தந்தார்.. சிகிச்சை தந்து கொண்டிருக்கும்போது பசுமாடு உயிரிழந்த சோகத்தில், விஜயபாஸ்கர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

கரிசனம்

கரிசனம்

பொதுவாக, இதுபோன்ற தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடப்பது இயல்புதான்.. ஆனால்,கர்ப்பிணி பசு மாட்டின் மீது வண்டியை கொண்டு வந்து மோதிய மனசாட்சி இல்லாத மிருகம் யார் என்று தெரியவில்லை..
குறைந்தபட்சம் மனிதாபிமானமே இல்லாமல், வண்டியை கூட நிறுத்தாமல் சென்றிருக்கிறார்கள்.. இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது!

English summary
Minister Vijayabaskar treated the Pregnant Cow injured in the accident near Madurai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X