மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

SUN னோட SON க்கே தடையா... மதுரையை கலக்கும் அழகிரி ஆதரவாளர் ஒட்டிய போஸ்டர்

Google Oneindia Tamil News

மதுரை: திமுகவிலிருந்து மு.க.அழகிரி நீக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது ஆதரவாளர் ஒருவர் SUN னோட SON க்கே தடையா என ரைமிங்காக போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பது மதுரை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மதுரைக்கும் போஸ்டருக்கும் அப்படி என்ன தான் பொருத்தமோ தெரியவில்லை, அங்கே அடிக்கக்கூடிய அரசியல் விளம்பர போஸ்டர்கள் மட்டும் விசித்திரமாகவே இருக்கின்றன.

குறிப்பாக மதுரை அரசியல்வாதிகள் ஆனாலும் சரி, திரை பிரபலங்களின் ரசிகர்களாக இருந்தாலும் சரி அவர்கள் உருவாக்கக் கூடிய விளம்பரப் பதாகைகளில் இடம்பெறும் வாசகங்கள் நிச்சயம் கவனம் பெறும் வகையிலேயே அமைகின்றன.

 தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவரைத்தான் கொண்டுவந்து போட்டு அடிக்கணும்.. ஸ்டாலின் ஆவேசம் தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவரைத்தான் கொண்டுவந்து போட்டு அடிக்கணும்.. ஸ்டாலின் ஆவேசம்

தொண்டர்கள்

தொண்டர்கள்

திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக ஒரு காலத்தில் ஓஹோவென கோலோச்சிய மு.க.அழகிரியை கருணாநிதி உயிருடன் இருந்தபோதே கட்சியை விட்டு நீக்கிவிட்டார். இதற்கு பிறகு திமுகவில் மீண்டும் இணைவதற்கான முயற்சிகளை மு.க.அழகிரி தரப்பில் இருந்து பலமுறை முன்னெடுக்கப்பட்டும் ஸ்டாலினிடம் இருந்து எந்த ரியாக்‌ஷனும் வரவில்லை. இதனால் கொதிப்படைந்த அழகிரி விமான நிலையங்களில் செய்தியாளர்களை சந்திக்கும் போது, ஸ்டாலின் மீதான தனது கோபத்தை காட்டியது குறிப்பிடத்தக்கது.

கோரிக்கை

கோரிக்கை

இதனால் குடும்ப உறவில் மேலும் விரிசல்கள் அதிகமானதே தவிர ஒற்றுமை ஏற்படவில்லை. இதையடுத்து செல்வி, தமிழரசு தரப்பில் இருந்து பேட்டிகளை தவிர்க்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து கடந்த சில மாதங்களாக எந்த ஊடகங்களிலும் பேட்டி கொடுக்காமல் அமைதி காத்து வருகிறார். மேலும், அவரது ஆதரவாளர்களும் ஸ்டாலினுடன் தன்னை இணைந்து செல்லுமாறு வலியுறுத்துவதால் அது தொடர்பான ஆலோசனைகளிலும், யோசனைகளிலும் மீண்டும் அழகிரி ஈடுபட்டுள்ளார். இதனிடையே பாஜக தரப்பில் இருந்து சென்ற அழைப்பையும் அவர் நிராகரித்தது கவனிக்கத்தக்கது.

கட்சிவேட்டி

கட்சிவேட்டி

நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் வாடிப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற அழகிரிக்கு, திமுக கொடிகள் கட்டப்பட்டு, கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி ஆகியோர் படங்கள் இடம்பெற்றவாறு விளம்பரங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டிருந்தன. அந்த திருமணத்திற்கு முன்பு வரை அவர் செல்லும் நிகழ்ச்சிகளில் திமுக கொடிகளோ, தோரணங்களோ கட்டப்படாது. ஆனால், வாடிப்பட்டி நிகழ்வு ஒரு பெரிய மாற்றமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வரும் 30-ம் தேதி அழகிரி பிறந்தநாளை பெரியளவில் பழையபடி கொண்டாட முடிவெடுத்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.

 போஸ்டர்

போஸ்டர்

மு.க.அழகிரியின் தீவிர விசுவாசிகளில் ஒருவர் கோபிநாதன். இவர் மதுரை முன்னாள் மேயர் தேன்மொழியின் கணவர். இவர்களின் மகன் பிரபாகரன் அழகிரி பிறந்தநாளுக்காக அடித்துள்ள போஸ்டர் தான் மதுரை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. SUN னோட SON க்கே தடையா என்ற வாசகத்துடன் மதுரை சுவர்களில் பளிச்சுடுகிறது அந்த போஸ்டர். மேலும், ஒற்றுமையாய் இருந்து ஒன்றாய் பயணிப்போம் என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
mk azhagiri supporter to make a poster in differently
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X