மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தறி நெய்து.. சவுராஷ்டிரா மொழியில் வணக்கம் தெரிவித்து.. ஸ்டாலின் அசத்தல் பிரச்சாரம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சவுராஷ்டிரா மொழியில் வணக்கம் தெரிவித்து.. ஸ்டாலின் அசத்தல் பிரச்சாரம்! -வீடியோ

    மதுரை: திமுக தலைவர் ஸ்டாலின் திருப்பரங்குன்றத்தில் சவுராஷ்டிரா மொழியில் வணக்கம் கூறி இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

    மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி உட்பட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அத்தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    பகல் நேரங்களில் வெயில் கொளுத்துவதால் கட்சித் தலைவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து நிலையூரில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

    உள்ளாட்சித் தேர்தல் இப்போது இல்லை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் உள்ளாட்சித் தேர்தல் இப்போது இல்லை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

    தறி நெய்த ஸ்டாலின்

    தறி நெய்த ஸ்டாலின்

    அப்போது நெசவாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்ற ஸ்டாலின் தறி நெய்யும் பணியில் ஈடுபட்டு அவர்களிடம் வாக்கு சேகரித்தார். இதனைத் தொடர்ந்து திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஸ்டாலின்.

    சவுராஷ்டிராவில் வணக்கம்

    சவுராஷ்டிராவில் வணக்கம்

    ஸ்டாலின் நெசவாளர்கள் மத்தியில் பேசியபோது சவுராஷ்டிரா மொழியில் வணக்கம் தெரிவித்து பேச்சைத் தொடங்கினார். அதனைக்கேட்ட தொண்டர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

    வந்தார் சென்றார்

    வந்தார் சென்றார்

    தொடர்ந்து பேசிய ஸ்டாலின் பெருவாரியான ஊராட்சிகளுக்குச் சென்ற ஒரே தலைவன் தான் தான் என்று தெரிவித்த அவர், வெறும் தேர்தலுக்கு வந்தார், வாக்குறுதிகள் தந்தார் என்ற போக்கில் இல்லாமல் சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்ற வகையில் தி.மு.க.வின் செயல்பாடுகள் அமையும் என்றார்.

    ஜெயலலிதா பிரச்சாரம்

    ஜெயலலிதா பிரச்சாரம்

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் பிரச்சாரத்திற்கு செல்லும் பகுதியில் வசிக்கும் பெருவாரியான மக்கள் பேசும் மொழியில் பிரச்சாரம் செய்வார், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்துள்ளார்.

    ஜெ.பாணியில்..

    ஜெ.பாணியில்..

    இந்நிலையில் சவுராஷ்டிரா மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்ற ஸ்டாலின், அவர்களின் மொழியிலேயே வணக்கம் கூறியுள்ளார். ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தது மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

    English summary
    MK Stalin said vanakkam in sourashtra language at Thiruparankundram election campaign.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X