மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகம் முழுவதும் வழக்குகள்.. முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் மனு.. நாளை விசாரணை

வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரி கமல் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்

    மதுரை: அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி மதுரை ஹைகோர்ட்டில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார்.

    பள்ளப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை கமல் பேசிய பேச்சுதான், கோர்ட்வரை கொண்டு இழுத்துவந்து விட்டது. இப்போதுவரை பாஜக, இந்து அமைப்புகள் உள்ளிட்டவர்களின் புகார்கள், கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

    கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி, டெல்லி பாட்டியாலா கோர்ட் முதல் மதுரை ஹைகோர்ட் வரை கேஸ் போடப்பட்டுள்ளது.

    சர்ச்சை பேச்சுக்கு பின்னர்.. பலத்த பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் சென்ற கமல்... மீண்டும் பிரச்சாரம் சர்ச்சை பேச்சுக்கு பின்னர்.. பலத்த பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் சென்ற கமல்... மீண்டும் பிரச்சாரம்

    போலீசில் புகார்

    போலீசில் புகார்

    மேலும் இந்து முன்னணி, கரூர் மாவட்டச் செயலர் ராமகிருஷ்ணன், 'இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசிய, கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரவக்குறிச்சி போலீசில் நேற்று புகார் கொடுத்தார்.

    வழக்கு பதிவு

    வழக்கு பதிவு

    இந்த புகாரின்படி கமல் மீது, 153ஏ - மதத்தினர் இடையே கலவரம் ஏற்படுத்தும் வகையில், சர்ச்சைக்குரியபடி பேசுவது, 295ஏ - ஒரு குறிப்பிட்ட மதத்தினரை பற்றி பேசுவது ஆகிய பிரிவுகளில், அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அவசர வழக்கு

    அவசர வழக்கு

    இவை இரண்டுமே ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் ஆகும். அதனால் தன் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரி கமல்ஹாசன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கமல் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    அவசர வழக்கு

    அவசர வழக்கு

    இவை இரண்டுமே ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் ஆகும். மேலும் 13-க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் இது போல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதனால் தன் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரி கமல்ஹாசன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கமல் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    முன்ஜாமீன்

    முன்ஜாமீன்

    ஆனால் வழக்கு மற்றும் வழக்கு விசாரணைக்கு தடை கோரும் மனுக்களை விடுமுறை கால அமர்வில் விசாரிக்க இயலாது என்று மதுரை ஹைகோர்ட் நீதிபதி புகழேந்தி திட்டவட்டமாக சொல்லிவிட்டார். வேண்டுமானால் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தால் நாளையே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்று நீதிபதி அறிவுறுத்தினார்.

    முன்ஜாமீன்

    முன்ஜாமீன்

    நீதிபதி புகழேந்தியின் இந்த அறிவுரையை ஏற்று, கமல்ஹாசன் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Kamal hasan appealed in Madurai High Court to cancel the cases filed against him
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X