• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

முருகனுக்கு டீ வாங்க போன மனைவி.. அந்நேரம் பார்த்து வெட்டி தள்ளிய கும்பல்.. அதிர்ந்த மதுரை ஜிஎச்

|

மதுரை: முருகனுக்கு டீ வாங்க கேன்டீனுக்கு போயிருந்தார் அவரது மனைவி.. அந்த நேரம் பார்த்து ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து, முருகனை சரமாரி வெட்டி கொன்றுள்ளது ஒரு மர்ம கும்பல்.. இந்த சம்பவம் நடந்தது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் என்பதுதான் ஜீரணிக்க முடியாத அதிர்ச்சி தகவல்!

  மருத்துவமனைக்குள் சென்று நோயாளியை வெட்டிய கும்பல்

  மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன்... கடந்த 5-ம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது இவருக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது.. முருகனின் கை எலும்பு முழுதுமாக முறிந்துவிட்டது.

   murder: 4 unidentify persons killed man in madurai rajaji gov hospital today

  அதனால் தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.. தொடர்ந்து சிகிச்சையும் தரப்பட்டு வந்தது. முருகனை அவரது மனைவிதான் பக்கத்தில் இருந்து கவனித்து வருகிறார்.

  இந்நிலையில் இன்று காலை முருகன் தூங்கி கொண்டிருந்தார்.. அவருக்கு டீ வாங்கி தரலாம் என்று மனைவி கேன்டீனுக்கு போயிருந்தார்.. அந்த நேரம் பார்த்து 4 பேர் திடீரென முருகன் படுத்திருந்த ரூமுக்குள் நுழைந்தனர்.. எல்லார் கையிலும், கத்தி, அரிவாள் இருந்தன.. தூங்கி கொண்டிருந்த முருகனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

  ரத்த வெள்ளத்தில் முருகன் உயிருக்கு போராடினார்.. அவருடைய அலறலை கேட்டு டாக்டர்கள் ஓடிவந்தனர்.. முருகனை காப்பாற்ற எவ்வளவோ போராடியும், முடியவில்லை.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக போலீசுக்கு தகவல் சொல்லப்பட்டு, அவர்களும் விரைந்து வந்தனர்.. முருகனின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்து, இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்டமாக, அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

  யார் இந்த முருகன் என்று தெரியவில்லை.. ஆனால் முருகனுக்கு நிறைய குற்ற பின்னணி உள்ளதாக தெரிகிறது.. ஏகப்பட்ட கொலை வழக்குகளிலும் தொடர்புடையவர் என்கிறார்கள்.. அதனால் முன்விரோதம் காரணமாகவே இந்த படுபயங்கரத்தை அரங்கேற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது சம்பந்தமான விசாரணையும் தீவிரமாகி வருகிறது.

  ஜன்னல் வழியாக எட்டி பார்த்தால்.. படுக்கையில்.. அண்ணனும் தங்கையும்.. அழுகிய நிலையில்.. ஷாக் தற்கொலை!

  எனினும், சம்பவம் நடந்தது அரசு மருத்துவமனையில் என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.. ராஜாஜி மருத்துவமனை என்றாலே தென் மாவட்டம் முழுவதும் ஃபேமஸ்.. அப்படி இருக்கும்போது, எப்படி அத்துமீறி மர்மநபர்கள் உள்ளே வந்தார்கள்? ஆஸ்பத்திரி வாசல்களில் வாட்ச்மேன்கள், செக்யூரிட்டிகள் இல்லையா? அப்படி இருந்தால் மர்மநபர்கள் எப்படி உள்ளே வந்திருக்க முடியும்? முருகன் மனைவி டீ வாங்க போவதை கவனித்து, பின்தொடர்ந்து வந்துதான் இந்த கொலையை செய்திருப்பதால், யாராவது குற்றவாளிகளுக்கு உதவினார்களா? என்று பல கேள்விகள் எழுகின்றன.

  நோயாளிகளை பார்ப்பதற்கு டைமிங் உள்ளது.. அந்த நேரம்தவிர வெளியாட்கள் யாருமே உள்ளே போக கூடாது என்பது பொதுவாக எல்லா ஆஸ்பத்திரிகளிலும் உள்ள விதிமுறைதான்.. இவ்வளவு பெரிய அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கொலையா என்பதை ஏற்கவே முடியவில்லை.

  நோயாளிகளில் எத்தனையோ பேர் குற்ற பின்னணி உடையவர்களா இருப்பார்கள்.. அதையெல்லாம் போலீஸ் கவனித்து நடவடிக்கை எடுக்கும் என்றாலும், இவர்களுக்கு சிகிச்சை செய்வதே ஆஸ்பத்திரிகளின் மனித நேய கடமை.. அப்படி நம்பி வரும் நோயாளிகளுக்கு உயிர் பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது... இன்னும் பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலுவாக சொல்ல வேண்டி உள்ளது!

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  murder: 4 unidentify persons killed man in madurai rajaji gov hospital today
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X