மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதர் மண்டிப் போய்க் கிடக்கும் எம்ஜிஆர்.. தாத்தாவின் சிலைகளுக்கு இந்த கதியா.. பேரன் வேதனை!

Google Oneindia Tamil News

Recommended Video

    புதர் மண்டிப் போய்க் கிடக்கும் எம்ஜிஆர் சிலைகள்.. பேரன் வேதனை

    மதுரை: தமிழகத்தில் பல இடங்களில் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைகளை முறையாக பராமரிக்காமல் புதர் மண்டி வைத்திருப்பதாகவும் சிலைகளை பாராமரிப் எம்ஜிஆர் அவர்களின் பேரன் நடிகர் ராமச்சந்திரன் வேதனை தெரிவித்தார்.

    எம்ஜிஆர் வளர்ப்பு மகள் சுதாவின் மகன் நடிகர் ராமச்சந்திரன் மதுரையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

     my grandfather statues worst maintenance in tamilnadu: MGR grandson ramachandran

    அப்போது பேசிய அவர், "பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் வெளி உலகத்திற்கு தெரிய ஆரம்பித்திருக்கிறேன், தற்போது பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார், கூடிய விரைவில் பல நல்ல படங்கள் வெளி வர இருக்கிறது.

    இதுமட்டுமல்லாமல் எம்ஜிஆர் அவர்களின் சேவையும் நற்பணியும் மக்களுக்கு தொடர்ந்து செய்ய என்னுடைய நற்பணி மன்றமும் எம்ஜிஆரின் ரசிகர்கள் இணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்து வருகிறோம், இது மட்டுமில்லாமல் குறையாக இல்லாத சாலைகள் தூர் வாராத ஏரிகள் உள்ளிட்டவற்றை நற்பணி மன்றம் சார்பாக நேரடியாக சென்று தூர்வாரி பராமரித்து வருகிறோம்.

    சில நாட்களில் பொன்னமராவதியில் புதியதாக நூலகம் ஒன்றை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க இருக்கிறோம். என்னுடைய தாத்தா எம்ஜிஆர் அவர்களை நினைவு கூறும் வகையில் தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலருக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகிறேன்.

    தமிழகத்தில் இதுவரை நான் சென்ற பல ஊர்களில் எம்ஜிஆர் அவர்களின் சிலையை முறையாக பராமரிக்காமல் புதர்மண்டி கிடக்கிறது, இந்த சம்பவங்கள் வேதனை அளிப்பதாகவும், சிலைகளை வைத்தது யாராக இருந்தாலும் அதற்கு உரிய மரியாதையும் பராமரிப்பு முறையாக செய்ய வேண்டும் இல்லை என்ற சிலைகளை நிறுவ வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

    English summary
    MGR grandson ramachandran said on madurai, my grandfather statues not well in tamilnadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X