மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா உடல் தகனம்

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Google Oneindia Tamil News

மதுரை: நீட் தேர்வு குறித்த அச்சத்தால் மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தத்தனேரி மயானத்தில் மாணவி உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

மதுரையில் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தத்தனேரி மயானத்தில் மாணவி உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

NEET suicide : Student body cremation

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் வசிப்பவர் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம். இவரது 19 வயது மகளான ஜோதி துர்கா ப்ளஸ் 2வில் 514 மதிப்பெண் பெற்றிருந்தார். நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த மாணவி ஜோதி துர்கா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து தோல்வியடைந்த மாணவி, இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். தனியார் பயிற்சி நிலையில் பயிற்சி பெற்று வந்த துர்கா வீட்டிலும் புத்தகம் கையுமா இருப்பாராம். காரணம் பெற்றோரும் மகளுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்.

படித்து படித்து களைத்து போன மாணவிக்கு தேர்வு நாள் நெருங்க நெருங்க அச்சம் ஏற்பட்டது. ஒருவேளை இந்த ஆண்டும் தேர்வில் தோற்றுப்போனால் பெற்றோர்கள் ஏமாந்து போய்விடுவார்களே என்ற மன அழுத்தம் மாணவிக்கு ஏற்பட்டது.

வீட்டில் தனி அறையில் படித்து வந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா இன்று அதிகாலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மாணவர்கள் எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் - ஓபிஎஸ் மாணவர்கள் எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் - ஓபிஎஸ்

இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தத்தனேரி மயானத்தில் மாணவி உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

மாணவியின் உடலுக்கு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் நேரில் அஞ்சலி செலுத்தினர். நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று தத்தனேரி மயானம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல அரசியல் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

English summary
The body of a student who committed suicide due to fear of NEET exam was completed and handed over to his parents. Following this, the body of the student was cremated at the Thathaneri Cemetery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X