மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரிஜினல் சிங்கப் பெண்.. புற அழகை இழந்தாலும்.. அக வலிமையோடு முன்னேறும் நேபாள பெண்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரிஜினல் சிங்கப் பெண்.. புற அழகை இழந்தாலும்.. அக வலிமையோடு முன்னேறும் நேபாள பெண்

    மதுரை: ஆசிட் வீச்சுக்குள்ளாகி புற அழகை இழந்தாலும் அக வலிமையோடு வாழ்வில் முன்னேறி வரும் பெண் குறித்த கதை இது. இந்தப் பெண் நேபாளத்தைச் சேர்ந்தவர்.

    சமீபத்தில் வெளியிடப்பட்ட பிகில் படத்தில் தனது காதலை ஏற்றுக் கொள்ளாததால் பெண்ணின் மீது காதலித்த இளைஞர் ஆசிட் அடிக்கும் நிகழ்வும் ஆசிட் அடித்து பாதிக்கப்பட்ட பெண் அதிலிருந்து வெளிவந்து தனது கனவுகளை நோக்கி பயணப்படுமாறும் ஒரு காட்சி இருக்கும்.

    அது திரையில் மட்டும் நடக்காது நிஜ வாழ்க்கையிலும் நடக்கும் என்பதற்கு ஒரு சான்றாக நேபாளத்தைச் சேர்ந்த பிந்தபாஷினி கனசகர் என்ற பெண்மணி உள்ளார். யார் இவர்.. அவரது வாழ்க்கையில் அப்படி என்னதான் நடந்தது ?

    நேபாள நாட்டுப் பெண்

    நேபாள நாட்டுப் பெண்

    நேபாள நாட்டின் ஹெட்டாடா பகுதியை சேர்ந்த மது கனசகர், பைதேஹி கனசகர் தம்பதியின் மகள்தான் பிந்தபாஷினி கனசகர். இவர் 2012 ஆண்டு 12 வகுப்பு படுத்து கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த திலீப் ராஜ் கேசரி என்ற இளைஞர் பிந்தபாஷினி கனசகரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். அதற்கு பிந்தபாஷினி கனசகர் பல முறை மறுப்பு தெரிவித்துள்ளார், ஆனால் அந்த இளைஞர் அதை கேட்காமல் மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்துள்ளார்.

    பிந்தபாஷினி கனசகர்

    பிந்தபாஷினி கனசகர்

    இதனால் பயந்து போன பிந்தபாஷினி கனசகர் தனது தந்தையிடம் கூறியுள்ளார். பெண்ணின் தந்தை அந்த இளைஞரிடம் இவ்வாறு செய்யக்கூடாது என்று அமைதியான முறையிலேயே கண்டித்துள்ளார். ஆனால் இதனால் ஆத்திரமடைந்த திலீப் ராஜ் கேசரி 15 நாட்களுக்குப் பிறகு பிந்தபாஷினி கனசகரிடம் வந்து உனது பார்ட்டிக்காக நான் தேன் கொண்டு வந்துள்ளேன் என்று கூறி அவரது முகத்தில் ஆசிட்டை ஊற்றி விட்டார்.

    முகத்தில் ஆசிட் வீச்சு

    முகத்தில் ஆசிட் வீச்சு

    முகம் முழுவதும் வெந்து அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்று சிகிச்சை கொடுத்து வந்தனர். பின்னர் தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார் பிந்தபாஷினி கனசகர் . இந்த நிலைமையில் அவர் தனது கடந்த கால வாழ்க்கையை மறந்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை தேடி செல்ல முயற்சி செய்தார்.

    மன தைரியம்

    மன தைரியம்

    இதைப்போன்று ஆண்கள் மூலம் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட சராசரி பெண்களைப்போல வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல் தானும் பிற பெண்களைப் போல தனது வாழ்க்கையில் வெற்றி பெற்று முன்னேறிச் செல்லவேண்டும் என்று அவருக்குள் ஏற்பட்ட உத்வேகத்தை தொடர்ந்து பாதியிலேயே அவர் கைவிட்ட பள்ளிப் படிப்பையும் அதைத்தொடர்ந்து தற்போது கல்லூரியிலும் படித்து வருகின்றார். இது ஒருபுறமிருக்க மன உறுதியுடன் மற்றொருபுறம் தனக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் இருந்து தான் மீண்டு வருவதற்காக சிகிச்சையையும் மற்றொருபுறம் செய்து வந்துள்ளார் பிந்தபாஷினி கனசகர் .

    மதுரையில் மறு வாழ்வு

    மதுரையில் மறு வாழ்வு

    இதற்கு அவரது குடும்பத்தினர் பல வகையில் தைரியம் கொடுத்துள்ளனர். அதன் விளைவாக மதுரையில் அமைந்துள்ள தேவதாஸ் மருத்துவமனையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை செய்யும் மற்றொரு புறம் நடந்து வந்தது. இதன் விளைவாக தற்போது பிந்தபாஷினி கனசகர் பல அறுவை சிகிச்சைகளை மன உறுதியுடன் கடந்து ஒரு அழகிய தோற்றத்தை தற்போது பெற்றுள்ளார். இது மருத்துவர் ஹேமா சதீஷ் கூறுகையில் இவர் எங்கள் மருத்துவமனையில் வந்து சிகிச்சைக்காக சேரும்போது இவரது முகத்தில் சதைகள் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது. இந்த நிலைமையில் பிந்தபாஷினி கனசகரின் மனவலிமை ஆளும் உறுதியான எண்ணத்தாலும் அனைத்திற்கும் ஒத்துழைத்தார்.

    புது முகம்

    புது முகம்

    அதன் விளைவாக இன்று அவருக்கு சரியான முறையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு அவரது முகம் மாற்றப்பட்டு உள்ளது. இவர் பிற பெண்களைப் போல இப்படி நடந்து விட்டதே என்று வீட்டிலேயே முடங்கி கிடந்து வருந்தாமல் தான் வாழ்க்கையில் அடுத்தடுத்து பல சாதனைகள் செய்து வெற்றி பெற வேண்டும் என்று பல முயற்சிகளை செய்து வருகின்றா.ர் இவ்வாறு செய்வதன் மூலம் இவர் ஒரு முன்னுதாரணமாக உள்ளார் என்றார்.

    ஒரிஜினல் சிங்கப் பெண்

    ஒரிஜினல் சிங்கப் பெண்

    பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் பாலாஜி கூறுகையில், இந்த சிகிச்சைக்கு இவரது முழு ஒத்துழைப்பும் எங்களுக்கு கிடைத்தது. மிகுந்த மன வலிமையுடன் எங்களது சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இவர் தனக்கு இப்படி நடந்து விட்டதே என்று வருத்தப்படாமல் படிப்பு ஒரு பக்கம் படித்துக்கொண்டே மற்றொரு பக்கம் இதே போல பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து அவர்களுக்கு உதவியும் வருகின்றார் என்று கூறினார்.

    உண்மையான சிங்கப் பெண் இவர்தான்.. இதுபோன்ற பெண்களுக்கு சமூகம் பாதுகாக்கும் கேடயமாக எப்போதும் இருக்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும்.

    English summary
    A Nepal woman who was attacked by a rejected one side lover has got her face again in Madurai hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X