மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"போலீஸ் ஸ்டேஷனே எங்களுக்குதான் கட்டிருக்கு".. கெத்து டிக்டாக்.. 9 பேரும் வழுக்கி விழுந்த பரிதாபம்

சர்ச்சை வீடியோ பதிவிட்ட 9 பேரையும் போலீசார் எச்சரித்துள்ளனர்

Google Oneindia Tamil News

மதுரை: "ஹே.. போலீஸ் ஸ்டேஷனே எங்களுக்குதான் கட்டியிருக்கு" என்று ஸ்டேஷன் வாசலிலேயே கெத்து காட்டிய ஹீரோக்கள் சிலர் ஜீரோவாகி வெளிய வந்த சம்பவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அடுத்து நாகதீர்த்தம் என்ற பகுதி உள்ளது.. இங்கு சிலர் கிடா சண்டை நடத்தி உள்ளனர்.

nine youth were warned by madurai police for controversy tiktok

லாக் டவுன் சமயத்தில் இப்படி கிடாசண்டை நடத்த கூடாது.. அதனால், 144 தடை உத்தரவை மீறி இப்படி செய்த குற்றத்திற்காக அஜித்குமார், பாண்டீஸ்வரன், பகவதிராம், பிரேம்குமார், கார்த்திகேயன், மாரி, அஜித்,அருண், ராமுஎன்ற 9 பேரை நாகமலைபுதுக்கோட்டை போலீசார் மடக்கி பிடித்து வழக்கு பதிவு செய்தனர்

மீண்டும் பள்ளிக்கு போகலாம்.. அரசு பள்ளிக்கு பெயிண்ட் அடித்து, அசத்தலாக மாற்றிய முன்னாள் மாணவர்கள்மீண்டும் பள்ளிக்கு போகலாம்.. அரசு பள்ளிக்கு பெயிண்ட் அடித்து, அசத்தலாக மாற்றிய முன்னாள் மாணவர்கள்

இதையடுத்து, அவர்களுக்கு போலீஸ் ஸ்டேஷனிலேயே நிபந்தனை ஜாமீன் வழங்கினர்.. ஆனால் ஜெயிலில் இருந்து வெளியே வரும்போதும் இவர்கள் அடங்கவில்லை.. திடீரென ஒரு டிக்டாக் வீடியோ பதிவிட்டனர்.. அதில், "போலீஸ் ஸ்டேஷன்லாம் எங்களுக்கு தான் கட்டிருக்கு" என ஆவேசமாக ஸ்டேஷன் முன்னாடியே நின்று வீடியோ எடுத்து வெளியிட்டனர்.

nine youth were warned by madurai police for controversy tiktok

இதை பார்த்த போலீசார், அவர்களை திரும்பவும் ஸ்டேஷனுக்குள்ளேயே அழைத்து சென்றனர்.. அப்பறம் என்ன? அத்தனை பேரும் பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டாங்க!!

"இனிமேல் இந்த மாதிரி ஸ்டேஷன் நின்று வீடியோ வெளியிட மாட்டோம், இப்படி நடக்காது" என்று எழுதி தந்துவிட்டு வெளியே வந்தனர்.. ஸ்டேஷனுக்குள்ளே கெத்து காட்டிட்டு போனவர்கள் எல்லாம், வாலை சுருட்டிக் கொண்டு வெளியே வந்தனர்.

English summary
nine youth were warned by madurai police for controversy tiktok
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X