மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோர்ட் வளாகத்தில் சுருண்டு விழுந்த நிர்மலா தேவி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த நிர்மலா தேவி-வீடியோ

    மதுரை: நீதிமன்ற வளாகத்தில் திடீரென மயக்கம் போட்டு விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி.

    கல்லூரி மாணவிகளை, தவறான பாதையில் வழி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இதற்காக, நீதிமன்றம் வாய்தா போடும் தினங்களில் எல்லாம் நேரில் வந்து ஆஜராகி வருகிறார் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி. இவர், நீதிமன்றம், வரும் போதெல்லாம், தமிழக மீடியாக்கள் கவனத்தை ஒட்டுமொத்தமாக ஈர்ப்பது வழக்கம்.

    புது புது கெட்அப்

    புது புது கெட்அப்

    ஒவ்வொரு முறை ஆஜராக வரும் போதும், ஒவ்வொரு கெட்டப்பில் வந்து கவனம் ஈர்ப்பார் நிர்மலா தேவி. ஆரம்பத்திலெல்லாம், புடவை கட்டியபடி, நீதிமன்றம் வந்தார். இதன்பிறகு சுடிதாருக்கு மாறினார். இவர் நீதிமன்றத்துக்கு வந்து ஆஜராகி விட்டு. ஸ்கூட்டரில் கிளம்பிச் செல்வதை பார்ப்பதற்கு என்றே, நீதிமன்ற வளாகத்தில் ஒரு பெரிய கூட்டம் கூடிவிடும் என்றால் நீங்களே நினைத்து பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவுக்கு அனைவர் கவனத்தையும் ஈர்த்து வந்தார் நிர்மலா தேவி.

    மொட்டைத் தலை

    மொட்டைத் தலை

    கடந்த முறை அவர் நீதிமன்றம் ஆஜராக வந்த போது, யாரும் எதிர்பார்க்காத ஒரு கெட்டப்பில் வந்து இறங்கினார். தனது அழகான தலைமுடி அப்போது அவரிடம் இல்லை. மொட்டை போட்டு விட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். வழக்கிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும், என்பதற்காக கடவுளை வேண்டிக்கொண்டு மொட்டை போட்டதாக சிலர் தெரிவித்தார்கள். அது எந்த அளவு உண்மையோ நமக்கு தெரியாது.

    மயக்கம்

    மயக்கம்

    இந்த நிலையில்தான் இன்று மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வந்திருந்தார் நிர்மலாதேவி. ஆனால், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், நீதிமன்றத்தில் திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிர்மலா தேவிக்கு, காவல் துறையினரின் உதவியுடன் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய வழக்கில் தொடர்புடைய மற்ற இருவரும் கூட இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    காரணம் என்ன?

    காரணம் என்ன?

    கடுமையான மன உளைச்சல் காரணமாக நிர்மலாதேவி மயங்கி விழுந்தாரா, உடல் சோர்வு காரணமாக இப்படி ஒரு நிகழ்வு நடந்து விட்டதா என்பது இன்னும் தெரியவில்லை. இருப்பினும் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, நிர்மலாதேவி உடல்நிலை சீராக உள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    Farmer College Professor Nirmala Devi fell down unconsciously while she comes to attend Court proceedings in Srivilliputhur on today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X