மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலை நிறைய மல்லிகைப்பூ.. கழுத்தை அலங்கரிக்கும் நகை.. முகத்தில் புன்னகை.. டோட்டலாக மாறிய நிர்மலாதேவி

யாருடனும் பேசாமல் கோர்ட்டுக்கு அமைதியாக வந்து சென்றார் பேராசிரியை நிர்மலாதேவி

Google Oneindia Tamil News

Recommended Video

    மொத்தமாக மாறிய நிர்மலாதேவி-வீடியோ

    மதுரை: மல்லிப்பூ.. கழுத்தில் நகை.. மஞ்சள் கலர் புடவை... ரோஸ் கலர் பிளவுஸ்.. என ஜொலி ஜொலிக்க காரில் வந்து இறங்கியவரை.. யாராக இருக்கும் என்று எல்லோருமே ஒரு கணம் திரும்பி பார்த்தார்கள்.. அட.. அது நம்ம நிர்மலாதேவியேதான்!

    கடந்த ஒரு வருடமாக ஜெயிலுக்கும் கோர்ட்டுக்கும் அலையாய் அலைந்தவர் பேராசிரியை நிர்மலாதேவி. ஒவ்வொரு முறை வரும்போதும் அவருடன், போலீசார் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கில் திரண்டு வருவார்கள். ஒரு செய்தியாளரும் அவரிடம் பேசிவிடக்கூடாது என்று பொத்தினாற் போலவே கூட்டிட்டு வந்து பொத்தினாற் போலவே அழைத்து சென்றுவிடுவார்கள்.

    போலீசாருக்கு நடுவில் நடைபிணமாக வந்து சென்றார் நிர்மலா. முகமெல்லாம் சோகம்.. அவமானம்.. ஆற்றாமை.. தவிப்பு எல்லாமே அவரிடத்தில் தென்பட்டது அப்போது!

    அவலம்

    அவலம்

    யாருடனும் பேச நிர்மலாதேவிக்கு அனுமதி இல்லை. மனதில் உள்ளதை பேசக்கூட தடை போடப்பட்டது. சுற்றி இருப்பவர்கள் யார் என்று கூட ஒரு நிமிஷம் நின்று பார்க்க முடியாத அவலம்! போலீசாருக்கு நடுவில் கேள்விகளுடன் நுழைந்து வரும் மீடியாக்களின் மைக்கைகூட நிமிர்ந்து பார்க்க முடியாத பரிதாப நிலை! இப்படித்தான் ஒரு வருடம் ஓடியது!

    உயிரை பறித்த இன்ஸ்டாகிராம் காதல்! காதலனை சந்திக்க சென்னை வந்த பெண் தற்கொலை உயிரை பறித்த இன்ஸ்டாகிராம் காதல்! காதலனை சந்திக்க சென்னை வந்த பெண் தற்கொலை

    3 கட்டை பைகள்

    3 கட்டை பைகள்

    ஜாமீன் கிடைக்காதா என்று ஏங்கி கிடந்த நேரத்தில், கோர்ட் நேரடியாக தலையிட்டு 4 கேள்வியை நறுக்கென்று இந்த விஷயத்தில் கேட்ட பிறகுதான் நிர்மலாதேவிக்கு ஜாமீன் தரப்பட்டது. 3 கட்டை பைகளுடன் ஜெயிலை விட்டு ஒருவழியாக வெளியே வந்தார்!

    ரோஸ் கலர் பிளவுஸ்

    ரோஸ் கலர் பிளவுஸ்

    இப்போது அவருக்கு ஒரே ஒரு கண்டிஷன்தான் போடப்பட்டுள்ளது. எந்த பத்திரிகைக்கும் பேட்டி தரக்கூடாது என்பதுதான் அது. இந்நிலையில் இப்போது கோர்ட்டுக்கு வந்தார் நிர்மலாதேவி. தலையில் மல்லிப்பூ, கழுத்தில் நகை, மஞ்சள் நிற சேலை, ரோஸ் கலர் பிளவுஸ், என புதுப்பொண்ணு மாதிரி காரில் வந்து இறங்கினார் நிர்மலாதேவி.

    போயே போச்சு

    போயே போச்சு

    முகத்தில் தென்பட்ட கவலை, பீதி, பயம் எல்லாம் இப்போ போயே போச்சு... பார்க்கவே பளிச்சென இருந்தார். கூடவே ஒரு சின்ன ஸ்மைல் இருந்தது! போலீஸ், வக்கீல் என ஒருத்தருமே கூட வரவில்லை. தனியாகவே வந்தார்.

    உஷ்.. பேசக்கூடாது

    உஷ்.. பேசக்கூடாது

    அப்போது யாரோ ஒரு நிருபர் பேட்டி சம்பந்தமாக கேள்வி கேட்டிருப்பார் போல. அதுக்கு "உஷ்.. பேசக்கூடாது" என்று ஒத்தை விரலை தன் உதட்டின் மீது குவித்து வைத்து சைகை காட்டினார் நிர்மலா தேவி. ஆனால், ஜாமீன் கிடைச்சு இத்தனை நாள் ஆகியும், அவரது 2 பெண் குழந்தைகளும் அம்மாவை பார்க்க வரவே இல்லையாம்!

    English summary
    Professor Nirmala Devi has come to the court quietly. She has already been denied permission to interview the Media
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X