மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

200 நாட்களுக்கு மேல் சிறைவாசம்.. நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது மதுரை கிளை நீதிமன்றம்

Google Oneindia Tamil News

Recommended Video

    நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது மதுரை கிளை நீதிமன்றம்..வீடியோ

    மதுரை: பெண்களை தவறான பாதைக்கு அழைத்து சென்ற வழக்கில் சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் பேராசிரியர் நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். எனினும் அவரிடம் தனி அறையில் நீதிபதிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் நிர்மலா தேவி. இவர் அங்குள்ள கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியராக இருந்தார். இந்நிலையில் இவர் தன்னிடம் பயின்ற மாணவிகளை மதுரை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உயரதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு மூளைச்சலவை செய்தார்.

    இதையடுத்து அவர் பேசியது தொடர்பான ஆடியோ ஆதாரம் வெளியானதை அடுத்து அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    குலதெய்வம் மேல சத்தியம் பண்ணிட்டு வேலையை ஆரம்பிங்க.. துரைமுருகன் உருக்கம்! குலதெய்வம் மேல சத்தியம் பண்ணிட்டு வேலையை ஆரம்பிங்க.. துரைமுருகன் உருக்கம்!

    இருவர் மட்டும்

    இருவர் மட்டும்

    இந்நிலையில் பேராசிரியர் முருகனும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கேட்டதின் பேரில்தான் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தேன் என நிர்மலாதேவி வாக்குமூலம் அளித்தார். ஆனால் அவர்களோ மறுத்தனர். பெரும் புள்ளிகளின் பெயரை வெளியிட்டால் தனக்கு ஆபத்து என்பதால் நிர்மலா தேவி இவர்கள் இருவரை மட்டுமே கைகாட்டுகிறார் என சொல்லப்பட்டது.

    மத்திய சிறையில்

    மத்திய சிறையில்

    இவர்கள் கைகாட்டியதன் பேரில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 200 நாட்களுக்கும் மேலாக மதுரை பெண்கள் சிறையில் இருந்து வரும் நிர்மலா தேவிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது. அளிக்கப்படவில்லை.

    மனு தாக்கல்

    மனு தாக்கல்

    இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் முக்கிய குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்காததால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    இந்த மனு மீது நேற்றைய தினம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு நிர்மலா தேவியை ஆஜர்படுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் பேரில் இன்று பிற்பகல் அவர் மதுரை நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

    ஜாமீன்

    ஜாமீன்

    இந்த நிலையில் மதுரை நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் நிர்மலாதேவிக்கு நீதிபதிகள் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளனர். அவர்கள் கூறுகையில் நிர்மலா தேவி எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். வழக்கிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களிடம் பேட்டி கொடுக்கக் கூடாது என்றனர். எனினும் நிர்மலா தேவியிடம் நீதிபதிகள் தனி அறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பெரும் புள்ளிகளின் வயிற்றில் புளி கரைக்கிறது.

    English summary
    Nirmala Devi may confess the truth to the Chennai HC Madurai Branch?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X