மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிர்மலா தேவி ஹேப்பியா இருக்காங்க போலயே.. இந்த செய்தியை படிச்சா அப்படித்தான் தோணும்!

Google Oneindia Tamil News

மதுரை: மகளிர் தின கொண்டாட்டத்தையடுத்து மதுரை மத்திய சிறையில் நடத்தப்பட்ட போட்டிகளில் பேராசிரியை நிர்மலா தேவி ஏராளமான பரிசுகளை வென்றார்.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் நிர்மலா தேவி. இவர் அங்குள்ள ஒரு கலைக் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் தன்னிடம் பயின்ற மாணவிகளை மதுரை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உயரதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு மூளைச்சலவை செய்தார்.

இதையடுத்து அவர் பேசியது தொடர்பான ஆடியோ ஆதாரம் வெளியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நாளையோட கடைசி.. 4 சீட்தான்.. வந்தா வாங்க வராட்டி போங்க.. தேமுதிகவுக்கு அதிமுக கெடு? நாளையோட கடைசி.. 4 சீட்தான்.. வந்தா வாங்க வராட்டி போங்க.. தேமுதிகவுக்கு அதிமுக கெடு?

நிர்மலா வாக்குமூலம்

நிர்மலா வாக்குமூலம்

இந்நிலையில் பேராசிரியர் முருகனும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கேட்டதின் பேரில்தான் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தேன் என நிர்மலாதேவி வாக்குமூலம் அளித்தார்.

200 நாட்களுக்கு மேல்

200 நாட்களுக்கு மேல்

இதன்பேரில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 200 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் நிர்மலா தேவிக்கு இன்னும் ஜாமீன் அளிக்கப்படவில்லை. அவர் மதுரை பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மத்திய சிறையில்

மத்திய சிறையில்

இந்த நிலையில் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள சிறைகளில் பெண் கைதிகளும் மகளிர் தின விழாவை கொண்டாடினர். அதன்படி மதுரை பெண்கள் மத்திய சிறையிலும் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

வேதனை

வேதனை

இதில் பேராசிரியர் நிர்மலா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கும்மி போட்டி, பேச்சு போட்டி என பல போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் நிர்மலா தேவி பல பரிசுகளை வென்றார்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறைக் கண்காணிப்பாளர் பரிசுகளை தந்தார். மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்ற நிர்மலா தேவி, மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றது வேதனையை ஏற்படுத்துகிறது.

English summary
Professor Nirmala Devi won most of the prizes in Women's day competition conducted in Prison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X