மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீர்நிலையை ஆக்கிரமித்தவர்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது.. மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி!

நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கூடாது, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

மதுரை: நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கூடாது, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீர்நிலைகள் தமிழகம் முழுக்க பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது. பல ஏரிகள், குளங்கள் இதனால் காணாமல் போய் இருக்கிறது. இந்த நிலையில் இதற்கு எதிராக பல இடங்களில் வழக்குகள் பதியபப்பட்டு இருக்கிறது.

No voting right for people who have done water Aggression says Madurai High Court

இந்த நிலையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கையகப்படுத்த கோரியும் மதுரை ஹைகோர்ட் கிளையில் ரமேஷ் என்பவர் வழக்கு தொடுத்தார். அதில் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதில், நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கூடாது, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவர்களுக்கு வாக்குரிமை அளிக்க கூடாது. மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுகுறித்து சுற்றறிக்கை அளிக்க வேண்டும்.

நீர்நிலை ஆக்கிரமிப்பு வரைப்படத்தை மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக உருவாக்க வேண்டும். அதை மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். பிப்ரவரி 8ம் தேதிக்குள் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

அதன்பின் தேர்தல் ஆணையம் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிப்ரவரி 11க்குள் இதை செயல்படுத்த வேண்டும். பிப்ரவரி 13ம் தேதி இதன் மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். அதில் இருக்கும் நிறுவனங்களை நிறுவனங்களாக கருத கூடாது. அதன் வரிகளை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

English summary
No voting right for people who have done water Aggression says Madurai High Court bench.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X