மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன அலட்சியம்.. வடஇந்தியர்களை குவித்ததால் வந்த விளைவு.. மதுரையில் நேருக்கு நேர் மோத வந்த ரயில்கள்!

மதுரை அருகே ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் எதிர் எதிரே வந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வடஇந்தியர்களை குவித்ததால் வந்த விளைவு.. மதுரையில் நேருக்கு நேர் மோத வந்த ரயில்கள்!- வீடியோ

    மதுரை: மதுரை அருகே ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் எதிர் எதிரே வந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்னக ரயில்வேயில் பணியாற்றும் வடஇந்திய ஊழியர்களும் இதற்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மதுரை அருகே திருமங்கலத்தில் ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் எதிர் எதிரே ஒரே நேரத்தில் வந்ததால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரிக்கப்டுகிறது.

    மதுரையில் இருந்து தினமும் செங்கோட்டை நோக்கி ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல் செங்கோட்டையில் இருந்தும் மதுரைக்கு ரயில் தினமும் இயக்கப்படுகிறது. இந்த இரண்டு ரயில்களும் இன்று நேருக்கு நேர் மோத வந்தது.

    2 ரயில்கள் மோதவிருந்த பயங்கரம்.. தமிழ் மொழி புரியாமல் சிக்னலை மாத்திப் போட்ட இந்திக்கார அதிகாரி! 2 ரயில்கள் மோதவிருந்த பயங்கரம்.. தமிழ் மொழி புரியாமல் சிக்னலை மாத்திப் போட்ட இந்திக்கார அதிகாரி!

    என்ன நடந்தது

    என்ன நடந்தது


    மதுரையில் இருந்து செங்கோட்டை நோக்கி செல்லும் ரயில் திடீர் என்று தாமதமாக வந்து இருக்கிறது.

    தாமதத்தை ஈடுகட்டுவதற்காக உடனே இந்த ரயில் புறப்பட்டது.

    இந்த ரயில் செங்கோட்டை நோக்கி சென்று கொண்டு இருந்த போதே செங்கோட்டையில் இருந்து மதுரை வரும் ரயில் எதிரே வந்துள்ளது.

    இதனால் இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்துள்ளது. இது ஒரு வழி பாதை. அதனால் இரண்டு ரயில்களும், ஒரே நேரத்தில் எதிர் எதிரே வந்துள்ளது. இதனால் பெரிய விபத்து ஏற்பட்டு விடுமோ என்று அச்சம் நிலவியது.

    ஆனால் கடைசி நேரத்தில் இரண்டு ரயிலின் டிரைவர்களும் சுதாரித்த காரணத்தால் சில மீட்டர்கள் தூரத்திலேயே இரண்டு ரயிலும் நிறுத்தப்பட்டது. இதனால் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை. மிகப்பெரிய விபத்து நூலிலையில் தவிர்க்கப்பட்டது.

    மோசம்

    மோசம்

    இவ்வளவு பெரிய விபத்து நேரும் நிலைக்கு தென்னக ரயில்வே சென்றதற்கு பணியாளர்களின் அலட்சியமும் காரணம் ஆகும். இதுவரை இந்தியாவில் ரயில் விபத்துகள் ''விபத்துகளாவே'' நிகழ்ந்து இருக்கிறது. ஆனால் அலட்சியத்தால் நிகழ்ந்தது கிடையாது. ஆனால் இந்த விபத்து ரயில்வே பணியாளர்கள் ரயில்களின் நேரத்தை கூட கவனிக்காமல் செய்த அலட்சியத்தால் நிகழ்ந்தது.

    வடஇந்தியா

    வடஇந்தியா

    ரயில்வே பணியில் பெருமளவில் இந்திக்காரர்களைக் கொண்டு வந்து குவித்ததன் முதல் விளைவுதான் இந்த அலட்சியம் என்று கூற முடியும். தற்போது தென்னக ரயில்வேயில் தென்னகம் என்ற பெயர் மட்டுமே நமக்கு உரியதாக இருக்கிறது. ஆனால் தென்னக ரயில்வே முழுக்க வடமாநில மக்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இதுவும் கூட இவ்வளவு பெரிய அலட்சியத்திற்கு காரணம் ஆகும்.

    முறைகேடு

    முறைகேடு

    சமீபத்தில் ரயில்வே பணிக்கு இந்திக்காரர்களை அதிகம் எடுத்தனர். திறமை இருந்தும் தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தென்னக ரயில்வே முழுக்க இந்திக்காரர்கள் புகுத்தப்பட்டார்கள். இவர்கள் மொழி புரியாமல் செய்யும் தவறுகள் இவ்வளவு நாள் நம்மை மறைமுகமாக பாதித்தது. தற்போது இது நேரடியாக நம்மை பாதிக்க தொடங்கி இருக்கிறது.

    ரயில்வே பணி

    ரயில்வே பணி

    தென்னக ரயில்வேயில் பணியாற்றும் சில வடமாநில பணியாளர்கள் ஏற்கனவே முறைகேடாக தேர்வு எழுதி பணிக்கு சேர்ந்து இருக்கிறார்கள். பொய்யான மார்க் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று புகார் உள்ளது. இதற்கு இடையில்தான் மதுரையில் இன்று மிகப்பெரிய அசம்பாவிதம் நேரும் நிலை ஏற்பட்டுள்ளது. தென்னக ரயில்வே விபத்து ஏற்பட்டுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காத்திருக்காமல்... இப்போதே இந்த அலட்சியத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    English summary
    Two trains came facing each other near Madurai. But a big accident skipped at eleventh hour, Northern workers in Southern Railway are one of the reasons behind Madurai train incident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X