திடீரென அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்த டூவீலர்கள்.. மதுரையில் நடந்த மர்ம சம்பவம்..பதற வைக்கும் வீடியோ
மதுரை: மதுரையில் பழுது பார்க்கும் கடைசி வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் அதே பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் வைத்திருக்கும் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை அந்த பகுதியில் மிகவும் பிரபலம். இந்த நிலையில் நேற்று இவர் கடையில் நிறுத்தி வைத்து இருந்த இருசக்கர வாகனங்கள் திடீரென தீ பற்றி உள்ளது.
மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவிற்கு கொரோனா.. தனிமைப்படுத்திக்கொண்டார்!

வாகனம்
நேற்று இரவு கடைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5க்கும் அதிகமான வாகனங்கள் திடீரென தீ பிடித்துள்ளது. இரவு நேரம் என்பதால் தீ வேகமாக பரவி இருக்கிறது. கட்டிடம் உள்ளேயும் வேகமாக தீ பரவி இருக்கிறது.

தீயணைப்பு படை
இதையடுத்து அங்கு இருந்த மக்கள் உடனடியாக தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். தள்ளாகுளம் தீயணைப்பு படைக்கு உடனே தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து அங்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினார்கள்.

வழக்கு
சில மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் அங்கு இருந்த பல வாகனங்கள் முழுமையாக எரிந்து நாசமானது. இதை தொடர்ந்து கடை உரிமையாளர் பழனி போலீசுக்கு புகார் கொடுத்தார்.

விசாரணை
இது மர்ம நபர்களின் கைவரிசை என்று பழனி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்தி வருகிறார்கள். வாகனங்களை யாராவது திட்டமிட்டு தீ வைத்து இருக்கலாம் என்பதால் போலீசார் அங்கு இருக்கும் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து வருகிறார்கள்.