மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நம்ம வேட்பாளர் இருக்காரே.. ரொம்ப அப்புராணி.. பால் வடியும் முகம்.. சொல்வது ஓபிஎஸ்!

அதிமுக வேட்பாளர் முனியாண்டியை துணை முதல்வர் ஓபிஎஸ் பாராட்டி பேசினார்.

Google Oneindia Tamil News

திருப்பரங்குன்றம்: "நம்ம வேட்பாளர் எப்படி தெரியுமா? ரொம்ப அப்புராணி. பார்க்கறதுக்கே ரொம்ப சாது.. பால் வடிகிற முகம்.. அவரை நாம வெற்றி பெற வெக்கணும்" என்று ஏகத்துக்கும் முனியாண்டியை பாராட்டி இருக்கிறார் ஓபிஎஸ்!

முனியாண்டி திருப்பரங்குன்றம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே எக்கச்சக்க எதிர்பார்ப்புதான்.. யார் இந்த முனியாண்டி, எதற்காக இவரை வேட்பாளராக அறிவித்துள்ளார்கள் என்று?

 O Panneerselvam has praised Thiruprankundram AIADMK Candidate Muniyandi

ஏனென்றால் திருப்பரங்குன்றத்தில் போட்டியிட விருப்பம் ஒரு பெரிய லிஸ்ட்டே அதிமுக தலைமையிடம் இருந்தது. சிலர் சென்னைக்கே வந்து முகாமிட்டு விட்டார்கள். ஆனால் கோஷ்டி பூசலை தவிர்க்க.. முனியாண்டியை வேட்பாளராக அறிவித்ததை முனியாண்டியே எதிர்பார்த்திருக்க மாட்டார்! அவ்வளவு இன்ப அதிர்ச்சி அவருக்கு!

இலங்கையை போல் தமிழகத்திலும் வெடிகுண்டு தாக்குதல்.. வீடியோ வெளியிட்ட மதுரை நபர் இலங்கையை போல் தமிழகத்திலும் வெடிகுண்டு தாக்குதல்.. வீடியோ வெளியிட்ட மதுரை நபர்

இந்நிலையில், வேட்பாளர் அறிமுகக்கூட்டம், திருப்பரங்குன்றத்தில் இன்று நடந்தது. அதாவது முனியாண்டியை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம்! இதில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, "நாம் ஒரு தொண்டரைத்தான் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம். இயக்கத்துக்காக உழைத்த தொண்டர். ரொம்ப அப்புராணி. பார்க்கவே ரொம்ப சாது.. பால் வடிகிற முகம். பகுதி கழக செயலாளராக இருந்து பல பொறுப்புகளை வகித்தவர். நமக்கு ஒரு பக்கம் துரோகி, மறுபக்கம் எதிரி இருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் நாம் வென்றாக வேண்டும், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிக்காக நீங்கள் உழைத்தது போல், இந்த முறையும் வெற்றி பெற பாடுபட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

English summary
Dy CM O Panneerselvam has praised Thiruprankundram ADMK Candidate Muniyandi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X