மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதுகெலும்பு இல்லாத எம்பியா.. டிஆர் பாலுவின் விமர்சனத்துக்கு.. ரவீந்திரநாத் பதில்

Google Oneindia Tamil News

Recommended Video

    OPR replies to TR Balu | டிஆர் பாலுவின் விமர்சனத்துக்கு.. ரவீந்திரநாத் பதில்- வீடியோ

    மதுரை: பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சிக்காக எடுத்துவரும் திட்டத்திற்கும், நடவடிக்கைக்கும் என்றைக்கும் ஆதரவாக இருப்பேன் என தேனி லோக்சபா எம்பி ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார். முதுகெலும்பு இல்லாத எம்பி என்ற டிஆர் பாலுவின் விமர்சனத்துக்கும் பதில் அளித்துள்ளார்.

    நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தேர்வான ஒரே எம்பி என்றால் அது ரவீந்திரநாத் தான். தேனியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அவர், லோக்சபாவில் பிரதமர் மோடியின் அனைத்து திட்டங்களையும் வெகுவாக புகழ்ந்து பேசி வருகிறார். குறிப்பாக லோக்சபாவில் பாஜக எம்பிக்களை காட்டிலும் அதிக அளவு பிரதமர் மோடியை பாராட்டி வருகிறார்.

    இந்நிலையில் மதுரை விமான நிலையத்த்தில் ரவீந்திரநாத் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசுகையில்,

    சட்டசபை தேர்தல் ரஜினிகாந்த் கூட்டணிக்கு தலைமை.. முதல் முறையாக இறங்கிப் போகும் அதிமுக? சட்டசபை தேர்தல் ரஜினிகாந்த் கூட்டணிக்கு தலைமை.. முதல் முறையாக இறங்கிப் போகும் அதிமுக?

    புதிய இந்தியா கட்டமைப்பு

    புதிய இந்தியா கட்டமைப்பு

    பாஜக எந்த ஒரு திட்டத்தை கொண்டு வரும் பட்சத்தில் எதிர்க்கட்சியினர் நிராகரித்து வருவது குறித்து கேட்கிறீர்கள், பாரத பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவை புதிய இந்தியாவாக கட்டமைப்பதில் சிறப்பான நிர்வாகத்தை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் சிறப்பாக அமைந்து வருகிறது. மேலும் தொடர்ந்து சுதந்திர தின விழா விற்கு பிறகு வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் சிறப்பாக அமையப் பெறும்.

    சக உறுப்பினர்கள் ஆதரவு

    சக உறுப்பினர்கள் ஆதரவு

    நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது தமிழகத்திலிருந்து அதிமுகவின் தனி எம்பியாக இருந்து வந்த போதிலும் மற்ற மாநிலத்து எம்பிக்கள் சக நாடாளுமன்ற உறுப்பினராகத்தான் என்னை அணுகுகிறார்கள். அத்துடண் நண்பர்களாக இருந்து வருகின்றனர் என்றார்.

    பெருசாக எடுத்துக்க மாட்டேன்

    பெருசாக எடுத்துக்க மாட்டேன்

    திமுக உறுப்பினர் டி ஆர் பாலு நாடாளுமன்ற கூட்டத்தின் போது முதுகெலும்பற்ற நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விமரிசனத்தை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்பது குறித்த கேள்விக்கு "நாட்டின் உரிமைக்காக தான் குரல் கொடுத்தேன், எனவே இது குறித்த கருத்தை அவரிடமே கேட்க வேண்டும். மேலும் இதுபோன்ற விமர்சனங்களை பெரிதாக கருத்தில் கொள்வதாக இல்லை" என்றார்.

    பிரதமரின் செயலுக்கு ஆதரவு

    பிரதமரின் செயலுக்கு ஆதரவு

    பாஜகவிற்கே உங்களது ஆதரவு இருப்பதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு "பாரத பிரதமர் நாட்டின் வளர்ச்சிக்காக எடுத்துவரும் திட்டத்திற்கும், நடவடிக்கைக்கும் ஆதரவாக இருப்பேன் என்றார். தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு குறித்து எவ்விதமான கோரிக்கை முன்வைக்கப்படும் என்ற கேள்விக்கு

    முன்பே கூறியது போன்று தமிழ்நாடு அரசின் நிலைமை மற்றும் முதல்வர் அவர்களின் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் பிரதிபலிப்பேன் என்று கூறினார்.

    English summary
    op raveendranath reply after dmk mp tr baalu controversial remarks about without Spine mp
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X